என்னுடைய கரியரில் நான் எதிர்கொண்ட கடினமான பவுலர்கள் இந்த 4 பேர்தான் – தனித்தனியாக அறிவித்த விராட் கோலி

Virat
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி கடந்த 2008-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 302 ஒருநாள் போட்டிகள், 123 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 125 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அது தவிர்த்து 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் அவர் 262 போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் எண்ணில் அடங்கா பல சாதனைகளையும் படைத்துள்ளார்.

நான் எதிர்கொள்ள சிரமப்பட்ட பவுலர்கள் இவர்கள் தான் : விராட் கோலி

சர்வதேச போட்டிகளை பொறுத்தவரை விராட் கோலி 82 சதங்கள் அடித்து சச்சினுக்கு அடுத்து அதிக சர்வதேச சதங்களை விளாசியவர் என்று வீரராகவும் திகழ்கிறார். அதோடு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வகையான போட்டிகளிலும் ஒரே நேரத்தில் ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஒரே வீரராகவும் சாதனை நிகழ்த்தி இருந்தார்.

- Advertisement -

இப்படி சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கும் அவர் தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் நிலையில் இன்றளவும் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரராக விளையாடி வருகின்றார். இந்த ஆண்டு நடைபெற்று வரும் 205 ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணிக்காக இதுவரை 10 போட்டியில் விளையாடியுள்ள அவர் 6 அரைசதங்களுடன் 443 ரன்கள் குவித்துள்ளார்.

இதன்மூலம் இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் பங்கேற்ற பிரத்யேக நிகழ்ச்சி ஒன்றில் தான் இதுவரை தனது கரியரில் சந்தித்த கடினமான பவுலர்கள் யார்? என்ற கேள்விக்கு தனித்தனியாக பதிலளித்துள்ளார். அந்த வகையில் விராட் கோலி கூறுகையில் :

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் எதிர்கொண்ட பந்துவீச்சாளர்களில் கடினமான பவுலர் என்றால் அது இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் தான் என்று அவரது பெயரை குறிப்பிட்டுள்ளார். அதற்கடுத்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளராக லாசித் மலிங்காவை எதிர்கொள்வது கடினம் என்றும் சுழற்பந்து வீச்சாளராக ஆதில் ரஷீத்தை எதிர்கொள்வது கடினம் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடரில் முதல் வீரராக வரலாற்று சாதனையை நிகழ்த்த இருக்கும் விராட் கோலி – விவரம் இதோ

அதேபோன்று டி20 போட்டிகளைப் பொறுத்தவரை சுனில் நரேனை எதிர்த்து விளையாட சிரமப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நான்கு பவுலர்கள் தான் சர்வதேச கிரிக்கெட்டில் தான் எதிர்கொள்ள சிரமப்பட்ட பந்துவீச்சாளர்களாக விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.

Advertisement