உங்கள் வீட்டில் ஒருத்தருக்கு இந்த நிலைமை வந்தா இதை பண்ணுவீங்களா ? – கோவத்தில் கேள்வி கேட்ட கோலி

Kohli-4
- Advertisement -

இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அடுத்த 21 நாட்களுக்கு வெளியே வரக்கூடாது என்று அரசாங்கம் தெரிவித்தாலும், சிலர் இந்த விதிமுறைகளை மீறி கும்பல் கும்பலாக வெளியே சுற்றி வருகின்றனர்.

corona

- Advertisement -

அவர்களை வீட்டில் இருக்குமாறு போலீசார் மற்றும் அரசாங்கம் எவ்வளவு கேட்டுக்கொண்டது ஆனாலும் சிலர் இன்னும் அந்த பழக்கத்தை கைவிட வில்லை. இந்நிலையில் இந்த நிலை இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வீடியோ ஒன்றினை மக்களுக்காக வெளியிட்டுள்ளார்.

அதில் வெளியே சுற்று பவர்களை பார்த்து கேள்வி கேட்கும்படி வீடியோ பதிவிட்டுள்ளார் இதுகுறித்து கோலி கூறுகையில் : ஹலோ நான் விராட் கோலி. இன்று இந்திய அணியின் வீரராக பேசவில்லை நாட்டின் ஒரு குடிமகனாக பேசுகிறேன். கடந்த சில நாட்களாக மக்கள் கும்பல் கும்பலாக சுற்றுவதை நான் பார்க்கிறேன்.

ஊரடங்கு விதிகளை மதிக்காமல் இருப்பதையும், விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பதையும் பார்க்கிறேன். மேலும் நாம் இந்த போராட்டத்தை மிக எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஆனால் நாம் இந்த சூழ்நிலையை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டதை இந்த நிகழ்வுகள் காட்டுகிறது. ஆனால் இந்த போராட்டம் அத்தனை எளிது கிடையாது.

- Advertisement -

நான் அனைவரையும் சோஷியல் டிஸ்டன்ஸிங் மூலம் தள்ளி இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் அரசாங்கம் கூறும் விதி முறைகளை பின்பற்ற வேண்டும். உங்கள் அலட்சியத்தால் உங்கள் குடும்பத்தில் கூட ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படலாம். அப்படி ஏற்பட்டால் இப்படி இருப்பீர்களா ? என ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள் என்று கோலி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் நிபுணர்கள் இந்த வைரசுக்கு எதிரான மருந்து கண்டுபிடிக்க அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேளுங்கள் குழுவாக வெளியே செல்வது விதிகளை மீறுவது ஆகியவற்றை காட்டிலும் நம் கடமையை பின்பற்றினால் மட்டுமே இதில் நாம் வெற்றி பெற முடியும். என்னை பொருத்தவரை இது நாட்டு நலனுக்கு எதிரானது எனக் குறிப்பிட்டுள்ளார். இனியாவது வெளியே செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே இருந்து பாதுகாப்பாக இருப்போம் என்று கோலி ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement