முதல் டி20 போட்டி : வெற்றிக்கு பிறகு தமிழக வீரரான நடராஜனை பாராட்டிய விராட் கோலி – விவரம் இதோ

Nattu
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. முன்னர் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இரண்டு போட்டியில் தோல்வியடைந்து தொடரை இழந்தது. நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 161 ரன்கள் குவிக்க அதன் பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

INDvsAUS

- Advertisement -

குறிப்பாக ஆஸ்திரேலியாவை 150 ரன்களில் கட்டுப்படுத்த தங்கராசு நடராஜன் மற்றும் சஹால் ஆகியோரின் மிகச் சிறப்பான பந்துவீச்சு தான் காரணம். இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார் தமிழக வீரர் தங்கராசு நடராஜன். இதற்கு முன்னர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய தங்கராசு நடராஜன் 2 விக்கெட் வீழ்த்தி இருந்தார். அறிமுகமான முதல் போட்டியிலேயே விக்கெட் வீழ்த்திய நடராஜனை தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த வெற்றிக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேசுகையில் : “ரவீந்திர ஜடேஜாவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக சாஹல் விளையாடினார். அவரை விளையாட வைக்கும் திட்டம் எங்களிடம் இல்லை. கன்கசன் மாற்று வீரர் விதி சற்று விசித்திமாக இருக்கிறது. இந்த முறை அந்த விதி எங்களுக்கு சாதகமாக இருந்தது. அடுத்த முறை இதுபோல் வேறு யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியவில்லை. அதே நேரத்தில் மாற்று வீரராக களமிறங்கிய சஹால் மிகச் சிறப்பாக பந்துவீசினார். ஆடுகளமும் அவருக்கு ஏற்றது போல் உதவி செய்தது.

Nattu

ஆஸ்திரேலிய அணி மிகச் சிறப்பாக துவங்கியது. அந்த நேரத்தில் எங்களை வென்று விடுவார்கள் என்று நினைத்தோம். ஆனால் டி20 போட்டி எப்படி வேண்டுமானாலும் எந்த கட்டத்தில் வேண்டுமானாலும் மாறலாம். அந்த அளவிற்கு நாங்களும் நெருக்கடி கொடுத்தோம் அணியில் நடராஜனை போல் ஒரு வீரர் எங்களுக்கு தேவை. அவரால் மிகப் பெரிய அளவில் இன்னும் மேம்பட முடியும். அவரது திறமை எங்களது அணிக்கு கண்டிப்பாக தேவை” என்று தெரிவித்திருக்கிறார் விராட் கோலி.

nattu 1

ஏற்கனவே ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி 2 விக்கெட்டுகளை வீழ்த்திய நடராஜன் தற்போது டி20 போட்டிகளிலும் அறிமுகமாகி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement