தோனியின் ஆட்டத்தை பார்த்து வியந்து போன விராட் கோலி என்ன சொல்லியிருக்காரு பாருங்க – விவரம் இதோ

Kohli
- Advertisement -

துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதலாவது குவாலிபயர் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலாவதாக விளையாடிய டெல்லி அணி நிர்ணயித்த 172 ரன்களை குவித்தது. பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது கடைசி ஓவரில் வெற்றிக்கு தேவையான ரன்களை அடித்து அசத்தலான வெற்றியை பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.

இந்த போட்டியின் முக்கியமான கட்டத்தில் இறுதி இரண்டு ஓவர்களுக்கு 24 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அணியின் கேப்டன் தோனி ரவிந்திர ஜடேஜா மற்றும் பிராவோ ஆகியோருக்கு முன்னதாக களமிறங்கி சிறப்பாக போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார். 6 பந்துகளை சந்தித்த தோனி 3 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 18 ரன்கள் சேர்த்து மீண்டும் தனது சிறப்பான பினிஷிங்கை சிஎஸ்கே அணிக்காக வழங்கியுள்ளார்.

- Advertisement -

அவரது இந்த சிறப்பான ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் என பலரும் தங்களது பாராட்டுக்களை தோனிக்கு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தோனியின் இந்த ஆட்டத்தை பார்த்து வியந்து போன இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி போட்டி முடிந்த சில நிமிடங்களிலேயே தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் தோனியின் ஆட்டத்தை பாராட்டி தனது வாழ்த்துக்களை பதிவிட்டிருந்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் குறிப்பிடப்பட்டதாவது : “தி கிங் இஸ் பேக்”, “கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பினிஷர் எப்போதுமே தோனி தான்”, இன்று இரவும் என்னை சீட்டின் நுனியில் இருந்து குதிக்க வைத்து விட்டார் என தோனியின் இந்த ஆட்டத்தை பாராட்டி விராட் கோலி தனது பதிவினை வெளியிட்டு உள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : ரபாடா இருக்கும்போது டாம் கரனுக்கு கடைசி ஓவர் கொடுத்ததன் காரணம் இதுதான் – ரிஷப் பண்ட் பேட்டி

அவரது இந்த தொடர்பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது ஏற்கனவே இந்த வெற்றியின் மூலம் தற்போது சிஎஸ்கே அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது அடுத்து இன்று இடம்பெற்ற போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்த்து விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது

Advertisement