ரபாடா இருக்கும்போது டாம் கரனுக்கு கடைசி ஓவர் கொடுத்ததன் காரணம் இதுதான் – ரிஷப் பண்ட் பேட்டி

Tom

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் தொடருக்கான முதலாவது குவாலிபயர் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி அணியானது ரிஷப் பண்ட், பிரித்வி ஷா மற்றும் ஹெட்மயர் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை குவித்தது. அதன்பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது துவக்கத்திலேயே டூபிளெஸ்ஸிஸ் விக்கெட்டை இழந்தது. அதன் பிறகு கெய்க்வாட் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோர் 2-வது விக்கெட்டுக்கு 110 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

பின்னர் உத்தப்பா 63 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய பிறகு அடுத்த பந்திலேயே ஷர்துல் தாகூர் 4-வது வீரராக களமிறங்கி முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் அதற்கடுத்த 15வது ஓவரில் ராயுடு ரன் அவுட் ஆகி வெளியேற போட்டியில் பதற்றம் உண்டாகியது. பின்னர் கடைசி இரு ஓவர்களில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 19-வது ஓவரின் முதல் பந்தில் கெய்க்வாட்டும் ஆட்டமிழந்து வெளியேறினார்.

- Advertisement -

இதன் காரணமாக 11 பந்துகளில் 23 ரன்கள் என்ற நிலை தேவைப்பட்ட இருந்தது. அப்போது 19-வது ஓவரை வீசிய ஆவேஷ் கான் அந்த ஓவரில் 11 ரன்கள் விட்டுக் கொடுத்தார். பின்னர் போட்டியின் இறுதி 20-வது ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. 20-வது ஓவரை வீச அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ரபாடா இருந்தும் ரிஷப் பண்ட் பந்துவீசும் வாய்ப்பை டாம் கரனுக்கு வழங்கினார். முதல் பந்திலேயே மொயின் அலியை வீழ்த்தி அவர் நிச்சயம் 5 பந்துகளில் 13 ரன்களை கட்டுப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

dhoni 1

ஆனால் தோனி தொடர்ச்சியாக 3 பவுண்டரிகளை அடித்து சென்னை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் டாம் கரன் கடைசி ஓவர் வீசியது தவறு என்றும் அதுவே தோல்விக்கு காரணம் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய பண்ட் கடைசி ஓவர் குறித்து கூறுகையில் : இந்த போட்டி நிச்சயம் எங்களுக்கு ஒரு அதிர்ச்சியை அளித்துள்ளது.

- Advertisement -

dhoni

நாங்கள் இப்போது இருக்கும் மன நிலையை என்னால் விவரிக்க முடியவில்லை. எனினும் இந்தத் தவறில் இருந்து நாங்கள் அடுத்த போட்டியில் மீண்டு வருவோம். இன்றைய போட்டியில் நான் கடைசி ஓவரை டாம் கரனுக்கு கொடுக்கக் காரணம் யாதெனில் இந்த போட்டி முழுவதுமே அவர் சிறப்பாக பந்துவீசினார். இருப்பினும் கடைசி ஓவரில் ரன்கள் சென்றுவிட்டன. ஒரு போட்டியின் போது அன்றைய நாளில் எந்த பவுலர் சிறப்பாக பந்து வீசுகிறாரோ அவரையே கடைசி ஓவரில் பயன்படுத்துவோம்.

இதையும் படிங்க : குவாலிபயர் 1 : கடைசி ஓவர் வெற்றிக்கு பிறகு தோனி பேசியது என்ன ? – முழுவிவரம் இதோ

அந்த வகையில் தான் டாம் கரனுக்கு நான் கடைசி ஓவரை வழங்கினேன். முதலில் அவர் சிறப்பாக பந்து வீசினாலும் கடைசி ஓவரின் போது ரன்கள் சென்றுவிட்டன. இது எதார்த்தமான ஒன்று தான் இந்த போட்டியில் செய்த தவறில் இருந்து நாங்கள் சில பாடங்களைக் கற்றுக் கொண்டுள்ளோம். நிச்சயம் அடுத்த போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என்று ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement