ஐசிசி 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11ஆம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 212 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 66, வெப்ஸ்டர் 72 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக ரபாடா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்காவை அபாரமாக பௌலிங் செய்த ஆஸ்திரேலியா 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் பவுமா 36, டேவிட் பேடிங்கம் 45 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக பட் கமின்ஸ் 6 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக 74 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய விளையாடிய ஆஸ்திரேலியா போராடி 207 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அபாரமான மார்க்ரம்:
அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 58*, அலெக்ஸ் கேரி 43 ரன்களை எடுத்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக ரபாடா 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இறுதியில் 282 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு ரிக்கல்டன் 6, வியன் முல்தர் 27 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். ஆனால் மறுபுறம் துவக்க வீரர் ஐடன் மார்க்ரம் நங்கூரமாக விளையாடிய ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
அவருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் பவுமா தம்முடைய பங்கிற்கு நங்கூரமாக விளையாடினார். நேரம் செல்ல செல்ல 3வது நாள் முழுவதும் நங்கூரமாக விளையாடிய இந்த ஜோடி அவுட்டாகாமல் அசத்தி வருகிறது. அதில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான மார்க்ரம் 2வது இன்னிங்ஸில் பொறுப்பாக விளையாடி சதத்தை அடித்து 102* ரன்கள் குவித்துள்ளார்.
2017இல் கணித்த கோலி:
இதன் வாயிலாக ஐசிசி தொடரின் இறுதிப்போட்டியில் சதத்தை அடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் என்ற சாதனையையும் மார்க்ரம் படைத்துள்ளார். அப்படிப்பட்ட ஐடன் மார்க்ரம் பார்ப்பதற்கு தரமான வீரர் என்று 2018ஆம் ஆண்டிலேயே விராட் கோலி கணித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் 2018 மே 24 மாலை 6.31 மணிக்கு விராட் கோலி பதிவிட்டது பின்வருமாறு.
இதையும் படிங்க: 102 ரன்ஸ்.. ஜீரோ டூ ஹீரோ.. ஆஸியை ஆட்டிப் பார்க்கும் மார்க்ரம்… டக் அவுட்டாகி சதமடித்து உலக சாதனை சமன்
“ஐடன் மார்க்ரம் விளையாடுவதைப் பார்ப்பதில் மகிழ்ச்சி” என்று பதிவிட்டுள்ளார். அவருடைய கணிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவருடன் சேர்ந்து விளையாடும் பவுமா அரை சதத்தை அடித்து 65 ரன்கள் குவித்துள்ளார். 8 விக்கெட்டுகளை கைவசம் வைத்துள்ள தென்னாப்பிரிக்காவுக்கு இன்னும் 69 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. அதனால் இப்போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து தென்னாபிரிக்கா கோப்பையை வெல்ல பிரகாச வாய்ப்பு உருவாகியுள்ளது.



