ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற பிரகாச வாய்ப்பு உருவாகியுள்ளது. ஜூன் 11ஆம் தேதி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கிய அப்போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்கா 212 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 66, வெப்ஸ்டர் 72 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக ரபாடா 5 விக்கட்டுகளை சாய்த்தார்.
அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்காவை அபாரமாக பௌலிங் செய்த ஆஸ்திரேலியா 138 ரன்களுக்கு சுருட்டி வீசியது. அதிகபட்சமாக கேப்டன் பவுமா 36 டேவிட் பேட்டிங்கம் 45 ரன்களை எடுத்தார்கள். தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக ரபாடா 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அடுத்ததாக 74 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய ஆஸ்திரேலியா போராடி 207 ரன்களை குவித்தது.
மார்க்ரம் சாதனை:
அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 43, மிட்சேல் ஸ்டார்க் 58* ரன்களை எடுத்து கை கொடுத்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு அதிகபட்சமாக ரபாடா 4 விக்கெட்டுகளை எடுத்தார். இறுதியில் 282 ரன்களை சேசிங் தென்னாபிரிக்கா 3வது நாள் முடிவில் 213/2 ரன்கள் குவித்து அசத்தி வருகிறது. அந்த அணிக்கு இன்னும் 69 ரன்கள் மட்டுமே தேவைப்படுவதால் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து கோப்பையை வெல்ல பிரகாச வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய ஐடன் மார்க்கம் ஆரம்பம் முதலே நங்கூரம் கலந்த அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நேரம் செல்ல செல்ல பொறுப்புடன் விளையாடிய அவர் சதத்தை அடித்து 102* ரன்கள் குவித்துள்ளார். அவருடன் சேர்ந்து விளையாடிய கேப்டன் பவுமா 65* ரன்களுடன் களத்தில் உள்ளார்.
உலக சாதனை சமன்:
முன்னதாக இப்போட்டியின் முதல் இன்னிங்ஸ் டக் அவுட்டான மார்க்ரம் 2வது இன்னிங்ஸில் சதத்தை அடித்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் முதல் இன்னிங்சில் டக் அவுட்டாகி 2வது இன்னிங்சில் சதத்தை அடித்த முதல் சதத்தை அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை மார்க்ரம் படைத்துள்ளார். அத்துடன் ஐசிசி தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதத்தை அடித்த வீரர் என்ற உலக சாதனையும் அவர் சமன் செய்துள்ளார்.
இதையும் படிங்க: 102 ரன்ஸ்.. ஃபைனலில் ஐடன் மார்க்ரம் சரித்திர சாதனை.. ஆஸியை வீழ்த்தி கோப்பை வெல்லப் போகும் தெ.ஆ?
இதற்கு முன் 1975 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கேப்டன் கிளைவ் லாய்ட் சதத்தை அடித்து வெஸ்ட் இண்டீஸை வெற்றி பெற வைத்தார். 1996 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரவிந்தா டீ சில்வா சதத்தை அடித்து இலங்கையை வெற்றி பெற வைத்தார். அதே போல தற்போது மார்க்ரம் தென்னாபிரிக்காவை வெற்றி பெற வைக்க பிரகாச வாய்ப்புள்ளது.



