தோனியின் மிகப்பெரிய சாதனையை தட்டித்தூக்க அஸ்திவாரம் அமைத்த கோலி – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று புனே மைதானத்தில் துவங்கியுள்ளது.

Rohith 2

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தற்போது இந்திய அணி தற்போது உணவு இடைவேளை வரை ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ரோகித் சர்மா 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

கோலி கேப்டனாக இன்று தனது 50வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளார். இதன்மூலம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த வீரர்கள் பட்டியலில் இவர் தற்போது இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்னர் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 60 போட்டிகளில் கேப்டனாக தோனி பங்கேற்று முதலிடத்தில் உள்ளார்.

Ind

அதற்கடுத்து தற்போது 50 ஆவது போட்டியில் கோலி கேப்டனாக விளையாடி வருகிறார். இந்த போட்டியை வெற்றிகரமாக முடிந்தால் அவருக்கு இந்த போட்டி மிகச்சிறந்த நினைவு போட்டியாக அமையும். மேலும் விரைவில் இவர் தோனியின் 60 போட்டிகள் சாதனையை எளிதில் கடக்க வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement