உடல்நிலை சரியில்லாத காரணத்தால் முதல் முறையாக விராட் கோலி இன்று எடுத்த முடிவு – விவரம் இதோ

Virat Kohli
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 23-வது லீக் போட்டியானது இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.

முதல் முறையாக விராட் கோலி எடுத்த முடிவு :

அதன்படி நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து தற்போது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது டாசிற்கு பிறகு பெங்களூரு அணியில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில் கடந்த போட்டியில் விளையாடிய ஜேக்கப் டபி வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஜோஷ் ஹேசல்வுட் அணியில் இடம் பெற்றிருந்தார். அதனை தவிர்த்து மற்றொரு முக்கிய மாற்றமாக முதல்முறையாக ஆர்.சி.பி அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி பிளேயிங் லெவனில் இடம் பெறவில்லை.

இப்படி அவர் பிளேயிங் லெவனில் இடம் பெறவில்லை என்றாலும் நிச்சயம் சேஸிங்கின் போது அவர் இம்பேக்ட் வீரராக களமிறங்குவது உறுதி. இதன் காரணமாக ஐ.பி.எல் போட்டிகளில் முதல் முறையாக விராட் கோலி இம்பேக்ட் பிளேயராக இன்று விளையாட இருக்கிறார். இதற்கு காரணம் யாதெனில் :

- Advertisement -

இதையும் படிங்க : கம்பீரை நீக்கினால் இந்திய அணிக்கு தான் அது பெரிய ஆபத்து.. அவர் நேர்மையானவர் – முனாப் படேல் ஆதரவு

பொதுவாகவே களத்தில் இருந்து பீல்டிங் செய்ய மிகவும் விருப்பப்படும் விராட் கோலி கடந்த போட்டிக்கு பின்னர் ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக சற்று சிரமத்தை சந்தித்து வருவதால் இன்றைய போட்டியில் அவர் பீல்டிங் செய்யாமல் ஓய்வு எடுத்துக்கொண்டு நேரடியாக இம்பேக்ட் வீரராக பேட்டிங் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement