கம்பீரை நீக்கினால் இந்திய அணிக்கு தான் அது பெரிய ஆபத்து.. அவர் நேர்மையானவர் – முனாப் படேல் ஆதரவு

Munaf Patel
- Advertisement -

ராகுல் டிராவிடுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்ட கௌதம் கம்பீரின் தலைமையின் கீழ் இந்திய அணி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அடுத்தடுத்து மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக 2025 சாம்பியன்ஸ் டிராபி, ஆசியகோப்பை தொடர், 2026 டி20 உலக கோப்பை தொடர் என முக்கிய தொடர்களை கைப்பற்றி வருகிறது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை கௌதம் கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி சொந்த மண்ணில் தோல்விகளை சந்தித்து வருகிறது.

கவுதம் கம்பீருக்கு ஆதரவாக பேசிய : முனாப் படேல்

இதன் காரணமாக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் கெளதம் கம்பீர் பயிற்சியாளராக இருந்தாலும் டெஸ்ட் போட்டிகளுக்காக தனியாக பயிற்சியாளரை நியமிக்க வேண்டும் என்ற கருத்துக்கள் தொடர்ச்சியாக நிலவி வருகிறது. ஆனாலும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரை இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீர் தான் இருப்பார் என பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக அடுத்த ஒரு ஆண்டு வரை அவரது பதவியை யாராலும் பறிக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. அதேவேளையில் வி.வி.எஸ் லக்ஷ்மணன் டெஸ்ட் பயிற்சியாளராக வரவேண்டும் என்று சிலர் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கௌதம் கம்பீரை பதவியில் இருந்து நீக்கினால் வீரர்களை கையாள்வது மிக கடினமாகிவிடும் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான முனாப் பட்டேல் அவருக்கு ஆதரவாக சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : கௌதம் கம்பீரை மட்டும் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டால் அணியில் உள்ள வீரர்களை கையாள்வது மிகவும் கடினமாகிவிடும். ஏனெனில் கௌதம் கம்பீர் ஒரு நேர்மையான மனிதர். உண்மையை உள்ளபடியே கூறுவார். எதையும் வெளிப்படையாக அவர் பேசுவதால் பலருக்கும் அவரை பிடிப்பதில்லை. ஆனால் அணியின் நலம் கருதியை அவர் துணிச்சலான முடிவுகளை எடுக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனி என்ன எல்லா மேட்ச்லையும் ரன் அடிச்சாரா? ருதுராஜ் கெய்க்வாடுக்கு ஆதரவாக பேசிய – ரவிச்சந்திரன் அஷ்வின்

அதேபோன்று விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற பெரிய வீரர்களை நீக்க வேண்டும் என்றால் கூட அந்த துணிச்சல் கம்பீருக்கு மட்டும் தான் உள்ளது. அவர் பணத்தை நேசிப்பவர் அல்ல கிரிக்கெட்டை நேசிக்கிறார். எனவே அவரை நீக்கினால் அது இந்திய அணிக்கு தான் ஆபத்து என முனாப் பட்டேல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement