நான் “GOAT” கிடையாது. அதுக்கு தகுதியானவங்க அவங்க 2 பேர் தான் – பெருந்தன்மையுடன் பேசிய விராட் கோலி

Kohli Press
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை மூன்று வகையான கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்தார். ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த பிறகு அவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சதம் அடிக்காமல் தவித்து வந்ததால் அவர் பார்ம் இழந்துவிட்டார் என்றும் அவர் இனி விளையாடக் கூடாது என்றும் ஒருசில பேச்சுக்கள் சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக பேசப்பட்டு வந்தன. ஆனால் இதற்கெல்லாம் செவி சாய்க்காத விராட் கோலி தனது மன ரீதியான ஓய்விற்காக கிரிக்கெட்டில் இருந்து விலகியிருக்க சிறிய ஓய்வினை எடுத்துக் கொண்டார்.

Virat-Kohli

- Advertisement -

அதன் பிறகு மீண்டும் ஆசிய கோப்பை தொடரில் அணியில் இணைந்த விராட் கோலி மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் இருந்த வேளையில் அந்த தொடரில் இந்திய அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை விளையாடி ரன்களை குவித்து கொடுத்தார். அதோடு ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் முதன்முறையாக டி20 கிரிக்கெட்டில் சதமும் அடித்து அவரது பார்மை நிரூபித்து இருந்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் அபாயகரமான வீரராகவும் விராட் கோலி திகழ்ந்து வருகிறார். ஏனெனில் நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 82 ரன்களும், நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 62 ரன்கள் என இரண்டு போட்டியிலுமே ஆட்டமிழக்காமல் இந்திய அணியின் வெற்றியையும் விராட் கோலி உறுதி செய்துள்ளார்.

viv

இதன் காரணமாக அவரை விமர்சித்தவர்கள் எல்லாம் தற்போது அவரை “GOAT” (Greatest of All Time) “கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” என்று புகழ்ந்து வருகின்றனர். இதே கருத்தினை பல்வேறு ரசிகர்களும் பகிர்ந்து வரும் வேளையில் : தான் அந்த பட்டத்திற்கு சரியானவராக நான் என்னை கருதி கொள்வது கிடையாது என்றும் அந்த GOAT பட்டத்திற்கு தகுதியான இரண்டு வீரர்கள் இருக்கிறார்கள் எனவும் விராட் கோலி சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : என்னை பொருத்தவரை எப்பொழுதும் GOAT என கருதி கொள்வது கிடையாது. என்னை பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கர் மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகிய இருவர் மட்டும்தான் கிரிக்கெட்டில் அந்த ஒரு சொல்லுக்கு தகுதியானவர்கள் என விராட் கோலி கூறியுள்ளார்.

இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பை : கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் – மாற்றுவீரர் இல்லையாம்

என்னதான் விராட் கோலி பெருந்தன்மையாக தன்னை ஆல் டைம் சிறந்த வீரர் இல்லை என்று கூறிக் கொண்டாலும் கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரது மத்தியிலும் அவர் “கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” தான் என்பது உண்மை.

Advertisement