டி20 உலகக்கோப்பை : கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் – மாற்றுவீரர் இல்லையாம்

AUS
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த தொடரின் தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்த வேளையில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்த இரண்டு பிரிவுகளிலும் இடம் பெற்றுள்ள ஆறு அணிகளில் தகுதி பெறும் அணிகள் அடுத்த சுற்றிற்கு முன்னேறும். அந்த வகையில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி இம்முறையும் கோப்பையை கைப்பற்றும் முனைப்போடு இந்த தொடரில் பங்கேற்றுள்ளது.

wade 1

- Advertisement -

ஏற்கனவே நடைபெற்ற முடிந்துள்ள இந்த சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணியானது இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற்று தங்களது அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை உயிருடன் வைக்க காத்துள்ளது. ஆனால் நேற்று நடைபெற இருந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் போனதனால் இரு அணிகளுக்குமே தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.

அதன் காரணமாக இனிவரும் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும். அதே போன்று அந்த பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகள் தோற்றால் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு திடீர் பின்னடைவாக அந்த அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான மேத்யூ வேட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Glenn Maxwell

ஏனெனில் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி போட்டியின் போது பாகிஸ்தானை வீழ்த்த மிக முக்கிய காரணமாக திகழ்ந்தவர் மேத்யூ வேட். அதுமட்டும் இன்றி கடந்த ஓராண்டாகவே அவர் டி20 கிரிக்கெட்டில் அபரவிதமான பினிஷராக மிகச் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

நேற்றைய இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு முன் அவர் களமிறங்குவாரா என்று உறுதி செய்யப்படாததால் கிளன் மேக்ஸ்வெல் விக்கெட் கீப்பர் பயிற்சி செய்து வந்தார். ஆஸ்திரேலிய டி20 உலக கோப்பை அணியில் விக்கெட் கீப்பர் வேடுக்கு பதிலாக பேக்கப் விக்கெட் கீப்பர் போல யாரும் கிடையாது என்பதால் நேற்று ஒருவேளை வேடு விளையாட முடியாமல் போயிருந்தால் வார்னர் அல்லது மேக்ஸ்வெல் ஆகிய இருவரில் ஒருவர் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்டிருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : டி20 உலககோப்பை : 2 வரலாற்று சாதனைகளை படைக்க காத்திருக்கும் விராட் கோலி – வேறலெவல்ங்க இவரு

கொரோனா தொற்று காரணமாக ஏற்கனவே அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா பாதிக்கப்பட்டுள்ள வேளையில் தற்போது மேத்யூ வேடுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அந்த அணிக்கு தற்போது மிகப்பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது. இருந்தாலும் ஆஸ்திரேலிய அணியின் அடுத்த போட்டிக்கு இன்னும் சில நாட்கள் இருப்பதினால் அவர் குணமடைந்து விளையாடுவாரா? மாட்டாரா? என்பது விரைவில் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement