பந்துவீச்சாளரை பற்றி நடுவரிடம் புகார் செய்த கோலி..! கண்டுகொள்ளாத நடுவர்கள் – காரணம் இதுதான் ?

virat
- Advertisement -

கிரிக்கெட் பந்து வீச்சாளர்களில் பந்துகளை வீசும் விவகாரத்தில் (அதாவது நமது பாஷையில் சொல்ல போனால் மாங்கா அடிப்பது என்னு கூறுவோம் )அதிகம் சிக்கியது இலங்கையின் வேக பந்து வீச்சாளர் மலிங்கா தான். ஆனால் தற்போது வெஸ்ட் இண்டீஸ் சூழல் பந்து வீச்சாளர் சுனில் நரைன் பந்தை வீசுகிறார் என்றும், அவரது பந்து வீசும் முறை சரியில்லை என்றும் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி குற்றம் சாட்டியுள்ளார்.

virat

- Advertisement -

நேற்று நடந்த மும்பை மற்றும் பெங்களூருக்கு இடையேயான போட்டியில் பெங்களூர் அணி மும்பை அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது. இந்த போட்டியின் போது பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி சுனில் நரைன் பந்தை எறிகிறார் என்று நடுவர்களிடம் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இதுபற்றி நேற்று நடந்த போட்டியில் நடுவர்களாக இருந்த “நீகேள் லாங்” மற்றும் “அணில் சௌத்திரி” தெரிவிக்கையில் “நேற்று நடந்த போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டன் சுனில் நரைனின் பந்து வீச்சில் குற்றம் இருப்பதாக முடிவு செய்து நடுவர்களிடம் கூறினார். ஆனால் விதிமுறைகளின்படி ஆடுகளத்தில் உள்ள வீரர் எடுக்கும் முடிவுகளை நடுவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. அது முழுக்க முழக்க நடுவர்களின் வேலை. அவர்கள் தான் இது போன்ற புகார்களை “பிசிசிஐ “க்கோ “ஐசிசிஐ” க்கோ தெரிவிக்க முடியும்” என்று ஆணித்தனமாக கூறிவிட்டார்கள்.

sunil

மேலும் சுனில் நரைனுக்கு இது போன்ற குற்றச்சாட்டுகள் வருவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே பாகிஸ்தானில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்ல் ) என்ற தொடரில் சுனில் நரைன் இது போன்ற பந்து எரியும் புகாரில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement