ஐ.சி.சி வெளியிட்டுள்ள புதிய டி20 தரவரிசை பட்டியல். விராட் கோலிக்கு ஏற்பட்ட வரலாறு காணாத சரிவு – விவரம் இதோ

Kohli
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் டி20 தொடர்களை கணக்கில் வைத்து டி20 பேட்ஸ்மேன்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த நவம்பர் மாத இறுதியில் டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி எப்போதும் இல்லாத வகையில் முதல் முறையாக மிகப்பெரிய சறுக்கல் சந்தித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி, நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்காததால் இந்த சரிவு அவருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

அதேவேளையில் டி20 உலக கோப்பை தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் இந்த பட்டியலில் 809 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து இங்கிலாந்து வீரர் டேவிட் மலான், தென்னாபிரிக்க வீரர் மார்க்ரம், பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

முதல் பத்து இடங்களுக்குள் ஒரே ஒரு இந்திய வீரராக இந்திய அணியின் துவக்க வீரர் கேஎல் ராகுல் மட்டுமே 5 வது இடத்தில் உள்ளார். எப்போதுமே டாப் 10-ல் ஆதிக்கம் செலுத்தி வந்த விராட் கோலி தற்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு 11வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : விஹாரியை தொடர்ந்து இந்திய ஏ அணிக்கு தள்ளப்பட்ட அற்புதமான வீரர் – இவருக்கா இந்த சோதனை

நியூசிலாந்து தொடரில் இரண்டு அரை சதம் மற்றும் ஒரு போட்டியில் 48 ரன்கள் குவித்த ரோஹித் சர்மா 2 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தை பிடித்துள்ளார். ஐசிசி வெளியிட்ட டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியல் மேலே கொடுக்கப்பட்டுள்ளதை பார்க்கலாம்.

Advertisement