விஹாரியை தொடர்ந்து இந்திய ஏ அணிக்கு தள்ளப்பட்ட அற்புதமான வீரர் – இவருக்கா இந்த சோதனை

Thakur
- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்தே அணி தேர்வு குறித்து பல்வேறு விமர்சனங்கள் நாள்தோறும் எழுந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட வேளையில் மிடில் ஆர்டரில் விஹாரி நிச்சயம் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்திய அணியில் இருந்து விஹாரி நீக்கப்பட்டார். அதற்கான காரணத்தையும் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ தெரிவிக்கவில்லை.

IND

- Advertisement -

அதனை தொடர்ந்து அந்த விடயம் சர்ச்சையாக வெடிக்க கடைசி நேரத்தில் விஹாரி இந்திய ஏ அணியுடன் தென்னாப்பிரிக்க நாட்டிற்கு பயணிப்பதால் இந்த தொடரில் விளையாடவில்லை என்றும் அடுத்து வரும் தென்னாப்பிரிக்க தொடருக்கு அவர் தயாராகும் வகையில் அவர் அங்கு முன்கூட்டியே பயணிக்கிறார் என்றும் சப்பைக்கட்டு கட்டியது.

இந்நிலையில் அவரைத் தொடர்ந்து மற்றொரு வீரராக வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் சவுத்ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய ஏ அணியுடன் செல்ல இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மண்ணில் கடைசியாக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷர்துல் தாகூர் விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமின்றி பேட்டிங்கிலும் அதிரடியாக இரண்டு அரை சதங்களை விளாசி தனது அற்புதமான பார்மில் உள்ளார்.

Thakur

அந்த டெஸ்ட் தொடர் முடிந்து ஒரு சில மாதங்கள் கூட முழுவதுமாக முடிவடையாத நிலையில் அவரை இந்திய ஏ அணியுடன் இணைந்து தென் ஆப்பிரிக்காவிற்கு பிசிசிஐ அனுப்புகிறது. தேர்வு குழுவினரின் இதுபோன்ற மோசமான முடிவுகளை தற்போது ரசிகர்கள் பெருமளவு விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க : சுரேஷ் ரெய்னாவுக்கு இடமில்லை. சென்னை அணி தக்கவைக்கும் 4 வீரர்கள் இவர்கள்தான் – வெளியான தகவல்

ஏனெனில் பாண்டியாவிற்கு பதிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக ஷர்துல் தாகூரை உருவாக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் மீண்டும் அவரை இந்திய அணியில் இருந்து நீக்கி ஏ அணியுடன் அனுப்பவுள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement