- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விழும் போதெல்லாம் இதை செய்றேன்.. கடவுள் பரிசு கொடுக்கிறாரு.. பாகிஸ்தானை வீழ்த்திய ஆட்டநாயகன் கோலி பேட்டி

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பிப்ரவரி 23ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி துபாயில் நடைபெற்றது. அதில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் சுமாராக பேட்டிங் செய்து 242 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் முகமது ரிஸ்வான் 46, சௌத் ஷாக்கீல் 69 ரன்கள் எடுத்தனர்.

இந்தியாவுக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3, ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். பின்னர் சேசிங் செய்த இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 20, சுப்மன் கில் 46 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தனர். அதை வீணடிக்காமல் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி நங்கூரமாக விளையாடி சதத்தை அடித்து 100* ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

நாயகன் கோலி:

அவருடன் ஸ்ரேயாஸ் ஐயர் 56 ரன்கள் எடுத்து இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார். இதனால் இந்தியா செமி ஃபைனல் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்த நிலையில் பாகிஸ்தான் வெளியேறுவது 99% உறுதியாகியுள்ளது. இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகன் விருது வென்றார். இந்நிலையில் சுமாரான ஃபார்மில் இருக்கும் நேரங்களில் தம்முடைய 100% பங்களிப்பை கொடுக்க முயற்சிப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

அந்த உழைப்பைப் பார்த்து தமக்கு கடவுள் பரிசை கொடுப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “செமி ஃபைனல் வாய்ப்பை பிடிப்பதற்கான இந்த முக்கியமான போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்ய முடிந்தது நல்ல உணர்வை கொடுக்கிறது என்று உண்மையை சொல்ல வேண்டும். ஆரம்பத்திலேயே நாங்கள் ரோகித் சர்மா விக்கெட்டை இழந்ததால் கடந்தப் போட்டியில் கற்றப் பாடங்களை வைத்து பேட்டிங் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது”

- Advertisement -

கடவுளின் பரிசு:

“மிடில் ஓவர்களில் அதிகப்படியான ரிஸ்க் இல்லாமல் போட்டியை கடைசி வரை கட்டுப்படுத்துவது என்னுடைய வேலை. ஸ்ரேயாஸ் அதிரடியாக விளையாடி சில பவுண்டர்களை அடித்தார். அது என்னுடைய இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்த உதவியது. என்னுடைய ஆட்டத்தை புரிந்துள்ள நான் விமர்சனங்களை வெளியே வைத்து எனது இடத்திலிருந்து என் எனர்ஜி மற்றும் சிந்தனைகளை கவனித்துக் கொள்கிறேன்”

“களத்திலிருந்து என்னுடைய அணிக்காக உழைப்பதே எனது வேலை. கீழே விழும் நேரங்களில் எனக்கு நானே ஒவ்வொரு பந்திலும் 100% பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொள்வேன். அதற்கு கடவுள் பரிசைக் கொடுத்துள்ளார். பந்தில் வேகம் எங்கு இருக்கிறது என்பதைப் புரிந்து செயல்படுவது முக்கியம். இல்லையெனில் ஸ்பின்னர்கள் வேலையை காட்டி விடுவார்கள்”

இதையும் படிங்க: 23 ரன்களே அடித்தாலும் ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளி மாபெரும் சாதனை நிகழ்த்திய பாபர் அசாம் – விவரம் இதோ

“அப்ரிடியை கில் நன்றாக எதிர்கொண்டார். அதனாலேயே அவர் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கிறார். பவர்பிளேவில் 60 – 70 ரன்கள் எடுப்பது முக்கியம். இந்தியாவைப் போல நான்காவது இடத்தில் ஸ்ரேயாஸ் துபாயிலும் அசத்துகிறார். 36 வயதானாலும் ஒவ்வொரு போட்டியிலும் முழுமையான பங்களிப்பை கொடுக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

- Advertisement -