பெங்களூருவில் சிஎஸ்கே ரசிகர்கள் டென்ஷன் பண்ணுவாங்க.. ஆர்சிபி ரசிகர்கள் அவங்க மாதிரி இல்ல.. கோலி பேட்டி

Virat Kohli
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரஜத் படிதார் தலைமையில் முதல் கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் விளையாடி வருகிறது. அவரது தலைமையில் முதல் 4 போட்டிகளில் 3 வெற்றிகளைப் பெற்றுள்ள பெங்களூரு புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடத்துக்குள் இருக்கிறது. மேலும் இம்முறை சென்னை மற்றும் மும்பை ஆகிய வெற்றிகரமான அணிகளை அதனுடைய சொந்த மண்ணிலேயே 15, 10 வருடங்கள் கழித்து பெங்களூரு தோற்கடித்துள்ளது.

அதன் காரணமாக இம்முறை ஆர்சிபி கோப்பையை வெல்லும் என்று அந்த அணி ரசிகர்கள் நம்பிக்கையுடன் காணப்படுகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் தங்களுடைய சொந்த ஊரில் இருக்கும் சின்னசாமி மைதானத்தில் சென்னைக்கு எதிராக விளையாடுவது மிகவும் டென்ஷனான போட்டியாக இருக்கும் என்று பெங்களூரு வீரர் விராட் கோலி கூறியுள்ளார்.

- Advertisement -

சிஎஸ்கே – ஆர்சிபி ரசிகர்கள்:

ஏனெனில் சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபிக்கு நிகராக சிஎஸ்கே ரசிகர்களும் வந்து சென்னை அணிக்கு ஆதரவாக முழக்கம் இடுவார்கள் என்று விராட் கோலி கூறியுள்ளார். ஆனால் சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் பெரியளவில் ஆர்சிபி ரசிகர்களை பார்க்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். ஏனெனில் சிஎஸ்கே போல ஆர்சிபி ரசிகர்கள் வெளியூருக்கு சென்று தங்களுக்கு ஆதரவு வழங்குவதில்லை என்றும் விராட் கோலி கூறியுள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “வரலாற்று ரீதியாக பெங்களூருவில் நாங்கள் விளையாடும் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடுவது கொஞ்சம் பதற்றம் நிறைந்ததாக இருக்கும் என்று உணர்கிறேன். அங்கே அவர்களுக்காக சிஎஸ்கே ரசிகர்கள் இருப்பார்கள்”

- Advertisement -

டென்ஷன் நிறைந்த போட்டி:

“பெங்களூருவில் சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடும் போது சென்னையைச் சேர்ந்த நிறைய ரசிகர்கள் இருப்பார்கள். அதனால் தான் கொஞ்சம் பதற்றம் இருக்கும். ஆனால் அவர்கள் (சேப்பாக்கம்) மைதானத்தில் விளையாடும் போது முழுவதுமாகவே சிஎஸ்கே ரசிகர்கள் இருப்பார்கள். பெங்களூருவில் சரி நாம் சென்று போட்டியைப் பார்க்கலாம் என்ற வகையில் மக்கள் இருப்பார்கள்”

இதையும் படிங்க: 2025 சீசனில் ராஜஸ்தானின் இந்த மோசமான நிலைக்கு காரணமே இதுதான்.. பெரிய தப்பு பண்ணிட்டாங்க – ராபின் உத்தப்பா

“சிஎஸ்கே ரசிகர்கள் நிறைய பயணம் செய்வார்கள் என்பது நமக்குத் தெரியும். அவர்கள் முன்கூட்டியே டிக்கெட்டுகளை வாங்கி சின்னசாமி மைதானத்தில் ஒரு பகுதியைப் பிடித்துக் கொள்வார்கள். சென்னை – பெங்களூரு போட்டியும் விறுவிறுப்பாக இருக்கும். அந்த வகையில் சிஎஸ்கே – ஆர்சிபி நான் ஒரு அங்கமாக இருந்த சுவாரசியம் மிகுந்த உற்சாகமான போட்டிகளாகும்” என்று கூறினார். அப்படிப்பட்ட போட்டி இம்முறை மீண்டும் வரும் மே 3ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement