2025 சீசனில் ராஜஸ்தானின் இந்த மோசமான நிலைக்கு காரணமே இதுதான்.. பெரிய தப்பு பண்ணிட்டாங்க – ராபின் உத்தப்பா

Robin Uthappa
- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாகவே மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஆரம்பகட்ட போட்டியிலேயே மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. அந்தவகையில் இதுவரை நடைபெற்ற முடிந்துள்ள 5 போட்டிகளின் முடிவில் மூன்று தோல்விகளுடன் அந்த அணி தற்போது புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.

ராஜஸ்தான் அணி செய்ஞ்ச மிகப்பெரிய தப்பே இதுதான் – ராபின் உத்தப்பா :

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் சன் ரைசர்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்த ராஜஸ்தான் அணி அதற்கடுத்து பலம் வாய்ந்த சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளை வீழ்த்தி தொடர்ந்து இரண்டு வெற்றிகளை பெற்றது. இதன் காரணமாக மீண்டும் அந்த அணி வெற்றி பாதைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் நேற்று நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்த தொடரில் தங்களது மூன்றாவது தோல்வியையும் அவர்கள் பதிவு செய்தனர். அதிலும் குறிப்பாக குஜராத் அணிக்கெதிரான இந்த மோசமான செயல்பாடு பலரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த போட்டியில் முதலில் பந்துவீசிய ராஜஸ்தான் அணி 219 ரன்களை விட்டுக் கொடுத்ததே அந்த அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ராஜஸ்தான் அணி இந்த சீசனில் இப்படி ஒரு மோசமான நிலையை சந்திக்க என்ன காரணம்? என்பது குறித்த சில கருத்துக்களை இந்திய அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா வெளிப்படையாக பேசியிருந்தார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ராஜஸ்தான் அணி மெகா ஏலத்தின் போதே மிகப்பெரிய தவறை செய்துவிட்டது. ஏனெனில் அந்த அணியில் இருந்த நட்சத்திர வீரர்களான ஜாஸ் பட்லர், அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், ட்ரென்ட் போல்ட் போன்ற பல வீரர்களை அவர்கள் வெளியேற்றியது மிகப்பெரிய பின்னடைவாக மாறியுள்ளது.

- Advertisement -

அதோடு ஷிம்ரன் ஹெட்மயர் ஒருவேளை காயமடைந்தால் அவருக்கு பதிலாக சரியான மாற்றுவீரர் கூட அந்த அணியில் கிடையாது. ராஜஸ்தான் அணித்தேர்வில் தான் மிகப்பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஜாஸ் பட்லரை அந்த அணி வெளியேற்றியது தான் அவர்கள் செய்த மிகப்பெரிய தவறு. ஏனெனில் ஜாஸ் பட்லர் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருபெரும் வீரர்களை வைத்துதான் அந்த அணி கடந்த காலங்களில் மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியது.

இதையும் படிங்க : 4 வேகப்பந்து வீச்சாளர்களால் வந்த வினை.. சஞ்சு சாம்சனுக்கு விதிக்கப்பட்ட 24 லட்சம் அபராதம் – என்ன நடந்தது?

சஞ்சு சாம்சன் கேப்டனாக இருக்கும்போது ஜாஸ் பட்லர் கொடுக்கும் உறுதுணை அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. ஆனால் இம்முறை அவர் அந்த அணியால் வெளியேற்றப்பட்டது மிகப்பெரிய தவறு இதுதான் ராஜஸ்தான் அணி இந்த சீசனில் தடுமாற முக்கிய காரணம் என ராபின் உத்தப்பா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement