இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 23-வது லீக் போட்டியானது நேற்று அஹமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.
சஞ்சு சாம்சனுக்கு 24 லட்சம் அபராதம் விதிப்பு :
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் குவித்தது.
குஜராத் அணி சார்பாக அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக வீரர் சாய் சுதர்சன் 82 ரன்களையும், ஜாஸ் பட்லர் மற்றும் ஷாருக் கான் ஆகியோர் தலா 36 ரன்களையும் குவித்தனர். பின்னர் 218 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது :
துவக்கத்திலிருந்தே அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து குஜராத் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களை கூட பூர்த்தி செய்யாமல் 19.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக குஜராத் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது தோல்வியை சந்தித்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு கூடுதலாக 24 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாதெனில் : நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை என்பதனால் ஸ்லோ ஓவர் ரேட் விதிமுறையின் அடிப்படையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஏ .பி.டிவில்லியர்ஸ் சாதனையை சமன் செய்து அசத்திய சாய் சுதர்சன் – இவர் உண்மையிலே கிளாஸ் பிளேயர்தான்
ஏற்கனவே சென்னை அணிக்கெதிரான போட்டியில் ஸ்லோ ஓவர்ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரியான் பராக்கிற்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது முறை சஞ்சு சாம்சனுக்கு 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவரை தவிர்த்து இந்த போட்டியில் விளையாடிய மற்ற ராஜஸ்தான் அணி வீரர்களுக்கும் போட்டி ஊதியத்தில் இருந்து 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



