ஏ .பி.டிவில்லியர்ஸ் சாதனையை சமன் செய்து அசத்திய சாய் சுதர்சன் – இவர் உண்மையிலே கிளாஸ் பிளேயர்தான்

Sai Sudharsan and ABD
- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 23-வது லீக் போட்டியில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது 58 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது நான்காவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. அதேவேளையில் இந்த தொடரில் தங்களது 3 ஆவது தோல்வியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி 7 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

ஏ.பி.டி வில்லியர்ஸின் சாதனையை சமன் செய்த சாய் சுதர்சன் :

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் குவித்தது. பின்னர் 218 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது குஜராத் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் :

- Advertisement -

19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்களை மட்டுமே குவித்ததால் 58 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் அணியின் துவக்க வீரரான சாய் சுதர்சன் 53 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 82 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டியில் அரைசதம் அடித்த சாய் சுதர்சன் முன்னாள் ஆர்.சி.பி வீரரான ஏபிடி வில்லியர்ஸின் மாபெரும் சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார். அந்த வகையில் சாய் சுதர்சன் செய்த சாதனை யாதெனில் : ஐபிஎல் தொடரில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் தொடர்ந்து 5 அரைசதங்களை அடித்த வீரர் என்ற பட்டியலில் ஏ.பி.டி வில்லியர்ஸ் மட்டுமே இருக்கிறார்.

- Advertisement -

அவர் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் தொடர்ச்சியாக ஐந்து அரைசதங்களை அடித்துள்ளார். அதனை தொடர்ந்து தற்போது சாய் சுதர்சன் அகமதாபாத் நகரில் கடைசியாக நடைபெற்ற ஐந்து போட்டிகளிலும் அரைசதம் அடித்து அவரது இந்த சாதனையை சமன் செய்துள்ளார்.

இதையும் படிங்க : சச்சினுக்கு அப்புறம் அந்த அதிசய வீரர் பிரியான்ஷ் ஆர்யா தான்.. அந்த டேலன்ட் போதும் – நவ்ஜோத் சிங் சித்து பாராட்டு

சாய் சுதர்சன் கடைசியாக அகமதாபாத் நகரில் நடைபெற்ற போட்டிகளில் முறையே 84*, 103, 74, 63, 82 ஆகிய ரன்களை குவித்துள்ளார். அதுமட்டுமின்றி முதல் 30 ஐ.பி.எல் இன்னிங்ஸ்களில் அதிக ரன்களை அடித்த வீரராக ஷான் மார்ஷ்க்கு அடுத்து இரண்டாவது இடத்தினை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement