வெறும் 18 நம்பரை வெச்சுகிட்டு ஆர்சிபி கோப்பை ஜெய்க்கும்ன்னு கனவு காணாதீங்க.. ரசிகர்களை கலாய்த்த கோலி

Virat Kohli
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் விளையாடி வருகிறது. அனில் கும்ப்ளே, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் தலைமையில் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியாது அந்த அணி அதிகமான கிண்டல்கள் மற்றும் விமர்சனங்களைச் சந்தித்துள்ளது. அந்த சூழ்நிலையில் இம்முறை புதிய கேப்டன் ரஜத் படிதார் தலைமையில் பெங்களூரு களமிறங்கியுள்ளது.

அவரது தலைமையில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு 4 வெற்றிகளை பெற்றுள்ளது. ஆச்சரியப்படும் வகையில் அந்த 4 வெற்றிகளையும் தங்களுடைய சொந்த மண்ணுக்கு வெளியே பெங்களூரு பதிவு செய்வது. குறிப்பாக பரம எதிரி சென்னையை அதனுடைய கோட்டையான சேப்பாக்கத்தில் 17 வருடங்கள் கழித்து சாய்த்த பெங்களூரு நடப்புச் சாம்பியன் கொல்கத்தாவையும் அதனுடைய ஊரில் வீழ்த்தியது.

- Advertisement -

18 வருடக் கனவு:

அதே போல மும்பையையும் அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து தனித்துவமான சாதனைப் படைத்த பெங்களூரு அணி தற்சமயத்தில் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறது. அப்படி சென்னை, மும்பை, கொல்கத்தாவை அதனுடைய சொந்த மண்ணிலேயே தோற்கடித்ததால் இம்முறை ஆர்சிபி ரசிகர்கள் கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.

இவை அனைத்தையும் விட விராட் கோலியின் ஜெர்சி நம்பர் 18 என்பதை அனைவரும் அறிவோம். அத்துடன் ஏற்கனவே 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஆகிய அடுத்தடுத்த 2 ஐசிசி கோப்பைகளை விராட் கோலி இந்தியாவுக்காக வென்றுள்ளார். மறுபுறம் 2008இல் துவங்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 18வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.

- Advertisement -

கலாய்த்த கோலி:

எனவே 18வது சீசனில் 18வது ஜெர்ஸி நம்பரைக் கொண்ட விராட் கோலி பெங்களூரு அணிக்காக முதல் ஐபிஎல் கோப்பையை வெல்வார் என்று ஆர்சிபி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஒரு கருத்தை உலாவ விட்டுள்ளனர். அது 2 ஐசிசி கோப்பைகளைத் தொடர்ந்து விராட் கோலி வெல்லும் ஹாட்ரிக் கோப்பையாக இருக்கும் ஆர்சிபி ரசிகர்கள் ட்விட்டரில் இப்போதே கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் ஆர்சிபி அணி வெல்லும் வரை இது போன்ற கனவுகளை காண வேண்டாம் என்று விராட் கோலி ரசிகர்களை கலாய்த்துள்ளார்.

இதையும் படிங்க: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக உமேஷ் யாதவ் நிகழ்த்தியிருந்த சாதனையை முறியடித்த சுனில் நரேன் – விவரம் இதோ

இது பற்றி ஆர்சிபி சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு. “இத்தனைக் காலங்களாக ஏன் நீங்கள் இவ்வாறு உணரவில்லை? இம்முறை கண்டிப்பாக கோப்பையை வெல்வோம் என்று உணர்வதற்கு உங்களுக்கு 18 வருடங்கள் தேவைப்பட்டதா? 16, 17, 19வது சீசன்களில் உங்களுக்கு அப்படி தோன்றவில்லையா? தோன்றாதா? ஆர்சிபி அணியை பொறுத்த வரை எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. அதே சமயம் நல்லக் காரணத்துடன் சரியான இடைவெளியில் நேர்மறையாக இருப்பது அவசியம்” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

Advertisement