பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று சண்டிகார் நகரில் நடைபெற்ற நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 31-வது லீக் போட்டியில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி பஞ்சாப் கிங்ஸ் அணியை 15.3 ஓவர்களில் 111 ரன்களுக்கு சுருட்டியது. இதன் காரணமாக இந்த போட்டியில் எளிதில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மேலும் முன்னேற்றத்தை கொல்கத்தா காணும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
உமேஷ் யாதவின் சாதனையை முறியடியத்த சுனில் நரேன் :
ஆனால் இந்த போட்டியில் 112 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி பஞ்சாப் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 15.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரங்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் காரணமாக 16 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அசுத்தலான வெற்றியும் பெற்றிருந்தது.
இப்படி மிக குறைவான இலக்கையே துரத்த முடியாமல் கொல்கத்தா அணி தோல்வியை சந்தித்தது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்திருந்தது. இந்நிலையில் இந்த போட்டியின் போது கொல்கத்தா அணி முதலில் பந்து வீசுகையில் அந்த அணியின் நட்சத்திர வீரரான சுனில் நரேன் 3 ஓவர்கள் பந்துவீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அப்படி அவர் வீழ்த்திய இந்த இரண்டு விக்கெட்டுகளின் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை ஒன்றினையும் நிகழ்த்தி அசத்தியுள்ளார். அதுகுறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் இதுவரை ஐபிஎல் போட்டிகளில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக உமேஷ் யாதவ் முதலிடத்தில் இருந்தார். உமேஷ் யாதவ் ஐ.பி.எல் போட்டிகளில் பஞ்சாப் அணிக்கு எதிராக ஐபிஎல் தொடரில் மட்டும் 35 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக முதலிடத்தில் இருந்தார்.
இதையும் படிங்க : ஐ.பி.எல் வரலாற்றில் சுனில் நரேனின் மாபெரும் சாதனையை சமன் செய்து அசத்திய யுஸ்வேந்திர சாஹல் – விவரம் இதோ
இந்நிலையில் நேற்று சுனில் நரேன் எடுத்த இரண்டு விக்கெட்டுகளின் மூலம் பஞ்சாப் அணிக்கு எதிராக 36 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக விக்கெடுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.