இதை நினச்சு கூட பாக்க முடியல.. ஆர்சிபி அணிக்காக அதை செய்யாம போக மாட்டேன்.. விராட் கோலி பேட்டி

Virat Kohli
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த வரிசையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களுடைய முதல் வீரராக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 21 கோடிக்கு தக்க வைத்துள்ளது.

கடந்த 2008 முதல் ஒரே ஐபிஎல் அணிக்காக விளையாடி வரும் வீரர் என்ற சாதனை படைத்துள்ள விராட் கோலி முடிந்தளவுக்கு பெங்களூருவின் வெற்றிக்கு போராடி வருகிறார். அந்த அணிக்காக மட்டுமே விளையாடியுள்ள அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரராகவும் சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் பெங்களூருவை தவிர்த்து மற்ற அணிக்காக விளையாடுவதை தம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது என்று விராட் கோலி கூறியுள்ளார்.

- Advertisement -

நினைத்து கூட பாக்க முடியல:

மேலும் அடுத்த 3 வருடம் விளயாடி ஓய்வு பெறுவதற்குள் ஆர்சிபி அணிக்காக ஒரு கோப்பையாவது வென்று கொடுப்பதே இலக்கு என்றும் விராட் கோலி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த ஏலத்தில் ஒரு அணியை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் உற்சாகமாக இருக்கிறது. ஒரு அணியாக இந்த சுழற்சியில் நான் முன்னோக்கிப் பார்க்கிறேன்”

“அடுத்த 3 வருடங்களில் ஒரு முறையாவது ஐபிஎல் பட்டத்தை வெல்வதே இலக்கு. அதற்காக எப்போதும் போல எங்களின் சிறந்த செயல்பாடுகளை கொடுக்கப் போகிறோம். கிரிக்கெட்டை விளையாடும் விதத்தில் எங்களுடைய ரசிகர்களை பெருமைப்படுத்த முயற்சிப்பேன். எனக்கு ஆர்சிபி என்றால் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த பல வருடங்களில் அது ஸ்பெஷல் தொடர்பை கொண்டுள்ளது”

- Advertisement -

விராட் கோலியின் இலக்கு:

“அது இன்னும் வலுவாக வளரும். ஆர்சிபி அணிக்காக விளையாடும் அனுபவம் இன்னும் ஸ்பெஷலானது. ரசிகர்களும் அனைவரும் இந்த அணியில் ஒரே வழியில் இணைந்திருப்பார்கள் என்று நம்புகிறேன். அடுத்த 3 வருடம் முடியும் போது நான் ஆர்சிபி அணிக்காக 20 வருடங்கள் விளையாடி முடித்திருப்பேன். அதுவே எனக்கு மிகவும் ஸ்பெஷலான விஷயம்”

இதையும் படிங்க: கம்மியா சம்பளம் வாங்கினாலும் நான் மும்பை அணியில் மீண்டும் விளையாட ஒத்துக்கிட்ட காரணம் இதுதான் – ரோஹித் சர்மா

“இப்படி ஒரே அணிக்காக இவ்வளவு வருடங்கள் விளையாடுவேன் என்று நான் எப்போதும் நினைத்ததில்லை. இந்த அணியை விட்டு வேறு அணியில் விளையாடுவதையும் என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை” என்று கூறினார். அந்த வகையில் விராட் கோலி மீண்டும் பெங்களூரு அணிக்காக விளையாட உள்ளார் என்பது அந்த அணி ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement