கம்மியா சம்பளம் வாங்கினாலும் நான் மும்பை அணியில் மீண்டும் விளையாட ஒத்துக்கிட்ட காரணம் இதுதான் – ரோஹித் சர்மா

Rohit
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற 2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்த ரோகித் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து டிரேடிங் செய்யப்பட்ட ஹார்டிக் பாண்டியாவை கேப்டனாக நியமித்து மும்பை அணி அதிரடி காட்டி இருந்தது. என்னதான் இந்த முடிவு அதிரடியான ஒன்றாக இருந்தாலும் சாம்பியன் கேப்டனான ரோகித் சர்மாவை பதவி நீக்கம் செய்தது ரசிகர்கள் மத்தியிலும் மட்டுமின்றி அந்த அணியின் முக்கிய வீரர்கள் மத்தியிலும் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருந்தது.

மீண்டும் தக்கவைக்கப்பட்டதில் மகிழ்ச்சி :

அதன் காரணமாக நிச்சயம் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா மும்பை அணியில் விளையாட மாட்டார் என்றும் மும்பை அணியில் இருந்து வெளியேறும் அவர் மெகா ஏலத்தில் கலந்து கொண்டு வேறொரு அணியில் பங்கேற்று விளையாடுவார் என்று கடந்த பல மாதங்களாக பல்வேறு கருத்துக்கள் உலா வந்தன. ஆனால் நேற்று மும்பை அணி வெளியிட்ட தங்களது அணி வீரர்களின் பட்டியலில் தக்க வைத்த ஐந்து வீரர்களில் ரோகித் சர்மாவும் இடம் பிடித்திருந்தார்.

- Advertisement -

மும்பை அணி அதிக சம்பளம் கொடுத்து முதல் வீரராக பும்ராவை தக்கவைத்து அவருக்கு 18 கோடி சம்பளத்தை ஒப்பந்தம் செய்துள்ளது. அதற்கு அடுத்து இரண்டு இடங்களில் சூரியகுமார் யாதவ் மற்றும் கேப்டன் ஹார்டிக் பாண்டியா இருவருக்கும் தலா 16 கோடியே 35 லட்சம் சம்பளம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நான்காவது வீரராக தக்கவைக்கப்பட்டுள்ள ரோஹித் சர்மாவிற்கு 16.30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹர்திக் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவை விட முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு 5 லட்சம் சம்பளம் குறைவாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று கடைசி வீரராக திலக் வர்மாவை எட்டு கோடி ரூபாய்க்கு அந்த அணி தக்கவைத்துள்ளது. இந்நிலையில் தான் மும்பை அணியில் மற்ற வீரர்களை விட குறைவான சம்பளத்திற்கு தக்க வைத்தது குறித்தும் மும்பை அணியில் மீண்டும் விளையாடு இருப்பது குறித்தும் பேசிய ரோகித் சர்மா கூறுகையில் :

- Advertisement -

உங்களுக்கே தெரியும் நான் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டேன். அதன் காரணமாக தற்போது நான் தக்க வைக்கப்பட்டிருக்கும் இடம் சரிதான் என்று நினைக்கிறேன். ஏனெனில் தற்போதைய இந்திய டி20 அணியில் விளையாடும் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அந்த வகையில் என்னை விட மற்ற வீரர்களுக்கு சம்பளம் அதிகமாக கொடுத்ததில் மகிழ்ச்சி தான். தற்போதைய இடத்தில் நான் இருக்கும் நிலையும் எனக்கு திருப்தியாக தான் உள்ளது.

இதையும் படிங்க : டெல்லியில் அவங்க ரெண்டு பேரையும் ஒன்னா பாத்தேன்.. சி.எஸ்.கே-வில் பெரிய சம்பவம் காத்திருக்கு – சுரேஷ் ரெய்னா ஹின்ட்

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒரு பகுதியாக மீண்டும் நான் இடம் பெற்று இருப்பதில் மகிழ்ச்சி. மும்பையில் தான் நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். இங்கு நிறைய கிரிக்கெட்டும் விளையாடியுள்ளேன். இந்த நகரம் எனக்கு சிறப்பு வாய்ந்தது. மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட உள்ளது நல்ல உணர்வுகளை கொடுத்திருக்கிறது என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement