பாண்டிங் மாதிரியே இஷாந்த் சர்மா என்னையும் ஸ்லெட்ஜ் பண்ணாரு.. அடிக்கவே முடியல.. 2008 பின்னணி பற்றி கோலி பேட்டி

Virat Kohli
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விராட் கோலி தொடர்ந்து 18வது வருடமாக விளையாடி வருகிறார். ஐபிஎல் துவங்கப்பட்ட 2008 முதல் ரோகித் சர்மா, தோனி உட்பட அனைத்து வீரர்களும் வெவ்வேறு அணிகளுக்காக விளையாடியுள்ளனர். ஆனால் விராட் கோலி மட்டுமே ஒரே அணிக்காக விளையாடி வரும் ஒரே வீரராக தனித்துவ சாதனை படைத்துள்ளார்.

அப்படிப்பட்ட அவர் 2008ஆம் ஆண்டு ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற வரலாற்றின் முதல் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக பெங்களூரு அணிக்காக விளையாடினார். அந்தப் போட்டியில் கொல்கத்தாவுக்காக விளையாடிய தம்முடைய மாநிலத்தைச் சேர்ந்த சக வீரர் மற்றும் நண்பர் இஷாந்த் சர்மா தன்னை ஸ்லெட்ஜ் செய்தது பற்றி விராட் கோலி நினைவு கொடுத்துள்ளார்.

- Advertisement -

பாண்டிங் போல ஸ்லெட்ஜிங்:

2008 பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடிய இஷாந்த் சர்மா ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கை ஸ்லெட்ஜிங் செய்து தெறிக்க விடும் வகையில் பௌலிங் செய்தார். அதே ஃபார்மில் ஐபிஎல் தொடரில் தமக்கு எதிராக பந்து வீசிய இஷாந்த் சர்மாவை தம்மால் அடிக்க முடியவில்லை என்றும் விராட் கோலி நினைவு கூர்ந்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“இஷாந்த்தும் நானும் ஏராளமான கிரிக்கெட்டை ஒன்றாக விளையாடியுள்ளோம். உள்ளூரில் அவரை நான் வலைப்பயிற்சியில் ஏராளமாக எதிர்கொண்டுள்ளேன். ஆனால் அந்த ஐபிஎல் போட்டியில் அவர் வித்தியாசமானவராக உணர்ந்தேன். அன்று வித்தியாசமான அழுத்தம் இருந்தது. அவரை நான் வலைப்பயிற்சியில் எதிர்கொண்டிருந்ததால் பயந்திருக்கவில்லை”

- Advertisement -

அடிக்க முடியல:

“ஆனால் அன்றைய நாளில் அவருடைய எந்த பந்துகளையும் என்னால் அடிக்க முடியாதது போல் உணர்ந்தேன். ஏனெனில் அந்தளவுக்கு மைதானத்தில் அழுத்தமான சூழ்நிலை நிலவியது. அந்தத் தொடரில் நாங்கள் வெவ்வேறு ஹோட்டல்களில் தங்கி இருந்ததால் அப்போட்டியைப் பற்றி எந்த விவாதமும் செய்யவில்லை. ஆனால் ஆம் இஷாந்த் என்னை அதிகமாகவே ஸ்லெட்ஜிங் செய்தார்”

இதையும் படிங்க: நாங்க இதை செஞ்சா போதும் எல்லா ரசிகர்களும் ஐபிஎல் விட்டுட்டு பிஎஸ்எல் பாக்க வந்துருவாங்க.. ஹசன் அலி பேட்டி

“குறிப்பாக ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த அவர் புதிய ஹேர் ஸ்டைலுடன் நட்சத்திரம் போன்ற அணுகு முறையைக் கொண்டிருந்தார். அந்த கோலத்தில் என்னிடம் ஸ்லெட்ஜ் செய்த அவரிடம் “ஓரமாக வாருங்கள் அதிரடியைக் காட்டுகிறேன்” என்று சொன்னேன். அவை அனைத்துமே ஜாலியாக இருந்தது” என்று கூறினார். தற்போது இந்திய அணியில் இடத்தை இழந்துள்ள இஷாந்த் சர்மா ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement