ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கோடைகாலத்தில் நடைபெற்று வரும் இந்த நம்பர் ஒன் பிரீமியர் லீக் டி20 தொடரை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்து வருகிறார்கள். ஏனெனில் இந்தத் தொடரில் விராட் கோலி, தோனி, ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள் மட்டுமின்றி ஏராளமான வெளிநாட்டு வீரர்களும் விளையாடுகிறார்கள்.
மேலும் இத்தொடரில் பெரும்பாலான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. அதனால் திரில்லர் திருப்பங்கள் நிறைந்த ஐபிஎல் தொடரை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர் என்றே சொல்லலாம். இதற்கிடையே பாகிஸ்தானில் பிஎஸ்எல் தொடர் வரும் ஏப்ரல் பதினொன்றாம் தேதி துவங்குகிறது. சமீப காலங்களில் ஐசிசி தொடர்களில் அமெரிக்கா, ஜிம்பாப்வே போன்ற கத்துக் குட்டிகளிடம் பாகிஸ்தான் மண்ணைக் கவ்வியது.
ஐபிஎல்’க்கு டாட்டா:
அத்துடன் சொந்த மண்ணில் கடந்த வருடம் வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் தோற்ற பாகிஸ்தான் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாமல் வெளியேறியது. அதனால் கோபத்தில் இருக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள் பிஎஸ்எல் தொடருக்கு முழுமையான ஆதரவு கொடுப்பார்களா என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் நாங்கள் சிறப்பாக விளையாடினால் அனைத்து ரசிகர்களும் ஐபிஎல் தொடரை விட்டு விட்டு பிஎஸ்எல் தொடரை பார்க்க வந்து விடுவார்கள் என்று பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி கூறியுள்ளார்.
இது பற்றி ஜிஈஓ தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ரசிகர்கள் நல்ல கிரிக்கெட்டை பொழுதுபோக்குடன் எங்கே விளையாட்டினாலும் அதை பார்ப்பார்கள். அந்த வகையில் பிஎஸ்எல் தொடரில் நாங்கள் நன்றாக விளையாடினால் பார்வையாளர்கள் ஐபிஎல் தொடரை விட்டு விட்டு எங்களைப் பார்ப்பார்கள்”
பாகிஸ்தான் மீண்டும் வரும்:
“அதே சமயம் தேசிய அணி நன்றாக செயல்படாத போது அது பிஎஸ்எல் போன்ற உள்ளூர் தொடரிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் பாகிஸ்தான் நன்றாக செயல்படும் போது பிஎஸ்எஎல் தொடரின் மௌசும் ஏற்றத்தை நோக்கிச் செல்லும். தற்போது பாகிஸ்தான் அணியின் முடிவுகள் சிறப்பாக இல்லை”
இதையும் படிங்க: சி.எஸ்.கே அணிக்கெதிரான போட்டி.. பஞ்சாப் வீரர் கிளென் மேக்ஸ்வெல்க்கு விதிக்கப்பட்ட அபராதம் – என்ன நடந்தது?
“இருப்பினும் அணியில் நிறைய புது முகங்கள் இருக்கின்றனர். எனவே அணி நிர்வாகத்திற்கும் கொஞ்சம் நேரம் தேவை. எது தவறாக சென்றது எங்கே தவறு நடந்தது என்பதை அறிந்து வீரர்கள் முன்னேறுவார்கள்” என்று கூறினார். முன்னதாக நியூஸிலாந்து இளம் அணியிடம் 3 – 0 (3) என்ற கணக்கில் பாகிஸ்தான் ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது. அதற்கு அடுத்ததாக பிஎஸ்எல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.



