யாருமே நல்லாருக்கியான்னு ஒரு வார்த்தை கேட்கல, எல்லாரும் அதுல தான் குறியா இருந்தாங்க – விராட் கோலி ஆதங்க பேட்டி, காரணம் என்ன

Kohli Press
- Advertisement -

டெல்லியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த 2008 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக வென்று சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிரந்தரமான இடத்தை பிடித்தார். குறிப்பாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை போலவே ரன் மெஷினாக 3 வகையான கிரிக்கெட்டிலும் 25000+ ரன்களையும் 75 சதங்களையும் அடித்த அவர் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து நவீன கிரிக்கெட்டில் தன்னை ஜாம்பவானாக நிரூபித்துள்ளார். இருப்பினும் பகலானால் இரவு வரும் என்ற இயற்கையின் நியதிகேற்ப 2019க்குப்பின் சதமடிக்காமல் தடுமாறிய அவரிடமிருந்து உலக கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்ற காரணத்தால் கேப்டன்ஷிப் பதவியை பிசிசிஐ பறித்தது.

Ajay-Jadeja-and-Virat-Kohli

- Advertisement -

அந்த காலகட்டங்களில் 40, 70 போன்ற நல்ல ரன்களை அடித்தும் சதமடிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக நிறைய முன்னாள் வீரர்கள் விராட் கோலியை இந்திய அணியிலிருந்து நீக்குமாறு அதற்கு முன் பெற்றுக் கொடுத்த வெற்றிகளின் நன்றி மறந்து விமர்சித்தனர். குறிப்பாக களமிறங்கினாலே சதமடிப்பார் என்று எதிர்பார்க்கும் அளவுக்கு ஆரம்ப காலம் முதல் அபாரமாக செயல்பட்டு தனக்கென்று தனித்துவமான தரத்தை உருவாக்கி வைத்ததே இறுதியில் விராட் கோலி உச்சகட்ட விமர்சனங்களை சந்திப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

நல்லாருக்கியான்னு கேட்கல:
இருப்பினும் ரிக்கி பாண்டிங், கெவின் பீட்டர்சன் மட்டுமல்லாமல் பரம எதிரி பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூட அவருடைய தரத்தை அறிந்து மெகா ஆதரவு கொடுத்தனர். அந்த ஆதரவுடன் 2022 ஆசிய கோப்பையில் சதமடித்து தனது விமர்சனங்கள அடித்து நொறுக்கிய விராட் கோலி 2022 டி20 உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்து தற்போது அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சதங்களை பதிவு செய்து ஃபார்முக்கு திரும்பி தன்னைச் சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளார்.

Virat Kohli

இந்நிலையில் ஆசிய கோப்பையில் ஃபார்முக்கு திரும்பாவிட்டால் அந்த மாதத்துடன் விடை பெறலாம் என்று நினைத்ததாக தெரிவிக்கும் விராட் கோலி மோசமான காலங்களில் பெரும்பாலானவர்கள் சதமடிக்கவில்லை என்று விமர்சித்தார்களே தவிர யாருமே நல்லாருக்கியா என கேட்கவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த ஆண்டு ஆசிய கோப்பைக்கு முந்தைய காலகட்டங்களில் நான் எல்லாவற்றையும் விட்டு விட தயாராக இருந்தேன். அந்தத் தொடரில் விளையாடச் செல்லும் போது அதுவே கிரிக்கெட்டில் நான் விளையாடும் கடைசி மாதமாக இருக்கலாம் என்ற எண்ணத்துடன் விளையாடியதை ஒப்புக்கொள்கிறேன்”

- Advertisement -

“அனைவரும் இந்த அழுத்தங்களை எங்களால் தாங்கிக் கொண்டு தீர்வு காண முடியும் என்று நினைத்தார்கள். இருப்பினும் நீங்கள் மனதளவில் சரியாக இல்லாத போது அனைத்து இடங்களிலும் தடுமாறுவீர்கள். அந்த சமயத்தில் என்னுடைய பேட்டிங்கில் டெக்னிக்கல் அளவில் தவறுகள் இல்லை. ஏனெனில் நான் 15 வருடங்களாக விளையாடி வருகிறேன். இருப்பினும் நல்ல ஃபார்மில் இருக்கும் போது கூட சில டெக்னிக்கல் தவறுகள் வரும். அந்த நிலையில் நான் புத்துணர்ச்சியடைந்து பந்தை மீண்டும் அடிக்க துவங்கிய போது அனைவரும் இவர் ஏதோ பெரிய மாற்றத்தை செய்து கொண்டு களமிறங்கியுள்ளார் என்று பாராட்டினர்”

Virat-Kohli-1

“ஆனால் உண்மையில் நான் அத்தொடருக்கு முன்பாக 6 வாரங்கள் பேட்டை கையில் எடுக்கவில்லை. என்னுடைய முந்தைய சாதனைகள் என்னால் அனைத்தையும் செய்ய முடியும் என்ற எண்ணத்தை எனக்கு கொடுக்கவில்லை. பொதுவாக நான் எப்போதும் எனது அணிக்கு என்னுடைய அனைத்தையும் கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன். அது நடைபெறவில்லை எனில் ஏதோ ஒரு மாற்றத்தை செய்ய வேண்டும். மேலும் இந்த உலகில் சந்தித்த அனைவரும் நான் சதமடித்து அவர்களுடைய கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் பார்க்க விரும்புகிறார்கள்”

இதையும் படிங்க:KKR vs CSK : எதிர்பார மிரட்டல் பேட்டிங்கை வெளிப்படுத்திய ரகானே – துபே, உச்சக்கட்ட சிக்ஸர்களை பறக்க விட்ட சிஎஸ்கே சாதனை ஸ்கோர்

“அந்த வகையில் என்னுடைய சாதனைகள் தான் அவர்களை மகிழ்ச்சியடைய வைப்பதை நினைத்து நான் வியந்தேன். குறிப்பாக என்னை சந்தித்த பெரும்பாலானவர்கள் யாருமே நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா அல்லது எப்படி போகிறது என்று கேட்கவில்லை. ஆனால் அவர்கள் அனைவரும் எல்லா நேரமும் தேவை தேவை தேவை (சதம்) என்று நினைத்தார்கள். அந்த சூழ்நிலையில் என்னை வைத்துக்கொள்வது அசாதாரணமாக இருந்தது. ஒவ்வொரு மூலையிலிருந்தும் இது போன்ற எதிர்பார்ப்புகள் என் மீது பாய்ந்தது” என்று கூறினார்.

Advertisement