- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சதத்தை விட நாட்டுக்காக விளையாடுவதே பெருமை.. இதுக்கு அவர் தான் முக்கிய காரணம்.. விராட் கோலி பேட்டி

ஆஸ்திரேலியா – இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் நடைபெற்று வருகிறது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 150 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலியா சுமாராக பேட்டிங் செய்து 104க்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 26 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் பும்ரா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் 46 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்திய அணி அபாரமாக பேட்டிங் செய்து 487-6 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 161, கேஎல் ராகுல் 77, விராட் கோலி 100* ரன்கள் குவித்தார்கள்.

- Advertisement -

விராட் கோலி அசத்தல்:

இறுதியில் 534 ரன்கள் துரத்தும் ஆஸ்திரேலியா நான்காவது நாள் முடிவில் 12-3 என தடுமாறி வருகிறது. தற்போதைய நிலையில் இந்தியா 522 ரன்கள் முன்னிலையில் இருப்பதால் இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு காணப்படுகிறது. முன்னதாக இந்த போட்டியில் விராட் கோலி சிறப்பாக பேட்டிங் செய்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து சதத்தை அடித்தார்.

இந்நிலையில் இப்போட்டியில் சதத்துக்காக விளையாடாமல் நாட்டுக்காக விளையாடி சதம் அடித்ததில் பெருமை கொள்வதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். அதற்கு தம்முடைய மனைவி அனுஷ்கா சர்மா முக்கிய பங்காற்றியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “என்னுடைய கடினமான நேரங்களிலும் அனுஷ்கா எனது பக்கத்தில் இருந்தார்”

- Advertisement -

நாட்டுக்காக பெருமை:

“இந்த சதத்துக்காக பின்னணியில் நடந்த அனைத்தையும் அவர் அறிவார். எனது தலைப்பில் என்ன செல்கிறது என்பதையும் அவர் அறிவார். நீங்கள் நன்றாக விளையாடாத போது சில தவறுகளை செய்து மீண்டும் உங்களுக்கு நீங்களே நன்றாக விளையாடத் துவங்குவீர்கள். நான் அணியின் வெற்றிக்காக பங்களிக்க விரும்புகிறேன். சொந்த சாதனைக்காக களத்தில் இருக்க விரும்பவில்லை”

இதையும் படிங்க: 100 சதங்கள்.. ஜாம்பவான்கள் டிராவிட், சச்சினை முந்திய கிங் விராட் கோலி.. படைத்த 3 சாதனைகள்

“நாட்டுக்காக விளையாடுவதை நான் பெருமையாக எடுத்துக் கொள்கிறேன். இது அற்புதமான உணர்வு. அனுஷ்கா இங்கே இருப்பது இன்னும் ஸ்பெஷலான உணர்வை கொடுக்கிறது” என்று கூறினார். இதை அடுத்து நான்காவது நாளில் ஆஸ்திரேலிய அணியின் எஞ்சிய 7 விக்கெட்டுகளையும் எடுக்க இந்தியா போராட உள்ளது. இந்த வகையில் பும்ரா தலைமையில் இந்தியா முதல் போட்டியில் சிறப்பாக விளையாடுவது ரசிகர்களையும் பெருமயடைய வைத்துள்ளது.

- Advertisement -