- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விராட் கோலியின் நிகர சொத்து மதிப்பு என்ன தெரியுமா? இத்தனை கோடிகளா? – தனியார் நிறுவனம் வெளியிட்ட தகவல்

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக பார்ம் இன்றி தவித்து வந்தார். ஆனால் கடந்த ஆண்டிலிருந்து அவரது ஆட்டம் தற்போது வேற லெவலில் மாறி உள்ளது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் தற்போதும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார்.

கிரிக்கெட் போட்டி, விளம்பரங்கள் மற்றும் சமூக வலைதளப்பதிவு என அவர் கோடிக்கணக்கில் சம்பாதித்தும் வருகிறார். உலக அளவில் அதிக வருவாய் ஈட்டும் வீரராகவும் அவர் பார்க்கப்படுகிறார்.

- Advertisement -

இந்நிலையில் விராட் கோலியின் நிகர சொத்து மதிப்பு என்ன? என்பது குறித்து பிரபல தனியார் நிறுவனமான ஸ்டாக் குரோ ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி விராட் கோலியின் தற்போதைய சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் ஆயிரம் கோடியை தாண்டி உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் ஏ ப்ளஸ் பிரிவில் இருக்கும் விராட் கோலி ஆண்டிற்கு ஏழு கோடி ரூபாய் பிசிசிஐ-யிடம் இருந்து வருமானமாக வாங்குகிறார். அதேபோன்று ஒரு டெஸ்ட் போட்டிக்கு 15 லட்சம், ஒருநாள் போட்டிக்கு 6 லட்சம், ஒரு டி20 போட்டிக்கு 3 லட்சம் என போட்டிக்கு போட்டி அவர்களுக்கு சம்பளமும் கிடைத்து வருகிறது.

- Advertisement -

அதோடு ஐபிஎல் தொடரின் மூலமும் ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் சம்பாதித்து வருகிறார். இப்படி கிரிக்கெட் போட்டிகளிலேயே கோடிகளை சம்பாதிக்கும் அவர் விளம்பரங்கள் மற்றும் சமூக வலைதளப்பதிவு மூலம் பல கோடிகளை ஈட்டி வருகிறார்.

இதையும் படிங்க : நான் பண்ணது தப்பு தான். குற்றத்தை ஒப்புக்கொண்ட மொயின் அலி. அபராதம் விதித்த அம்பயர் – என்ன நடந்தது?

அதோடு அவரது முதலீடும் தற்போது பல நிறுவனங்களில் இருப்பதினால் அவர்கள் நிகர சொத்து மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதாகவும் அந்த தகவல் கூறுகிறது. அதோடு இன்ஸ்டாகிராமிலும் அவரை கோடிக்கணக்கானோர் பின் தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by