ஐ.சி.சி ஒருநாள் தரவரிசையில் முன்னேற்றம் கண்ட விராட் கோலி – ரோஹித் எத்தனையாவது இடம் தெரியுமா?

Kohli-and-Rohit
Advertisement

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் தொடர்களின் முடிவின் அடிப்படையில் அனைத்து விதமான கிரிக்கெட் ரேட்டிங்களையும் அதாவது தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அண்மையில் பல ஒருநாள் தொடர்கள் நடைபெற்று முடிந்த வேளையில் தற்போது ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் என அனைத்து வகையான பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

virat kohli 166

அந்த வகையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் சமீபத்தில் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து அந்த இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுமான விராட் கோலி நல்ல முன்னேற்றம் கண்டுள்ளார். இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்ற விராட் கோலி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

- Advertisement -

அந்த தொடரில் இரண்டு சதங்கள் உட்பட 283 ரன்கள் குவித்த விராட் கோலி தொடர் நாயகன் விருதினையும் வென்றிருந்தது நாம் அறிந்ததே. அந்த வகையில் இந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரில் அசத்தலாக விளையாடிய விராட் கோலி தற்போது ஐசிசி பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Virat Kohli 46

கடந்த சில ஆண்டுகளாகவே பார்மின்றி தவித்து வந்த விராட் கோலி மீண்டும் பழையபடி சதங்களை விளாச துவங்கியுள்ள வேளையில் விரைவாக ஐசிசி தரவரிசை பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ள அவர் கூடிய விரைவில் அவர் இந்த பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறுவார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- Advertisement -

பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை பொறுத்தவரை பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்கா அணியின் வீரரான ராசி வேண்டர் டசன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். அவர்கள் இருவரை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் குவிண்டன் டிகாக் உள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பத்தாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 22 வருட கிரிக்கெட் வாழ்க்கைக்கு குட்பை சொன்ன நட்சத்திர தெ.ஆ வீரர் – ரசிகர்கள் சோகம்

அதேபோன்று பந்துவீச்சாளர்களின் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஹேசல்வுட் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். ஒருநாள் போட்டிகளுக்கான ஆல் ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் வங்கதேச அணியைச் சேர்ந்த சாஹிப் அல் ஹசன் முதல் இடத்திலும், ஆப்கானிஸ்தானை சேர்ந்த முகமது நபி இரண்டாவது இடத்திலும், வங்கதேசத்தை சேர்ந்த மெஹதி ஹாசன் மூன்றாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement