22 வருட கிரிக்கெட் வாழ்க்கைக்கு குட்பை சொன்ன நட்சத்திர தெ.ஆ வீரர் – ரசிகர்கள் சோகம்

Hasim-Amla
- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாகவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நட்சத்திர வீரர்கள் பலர் ஓய்வை அறிவித்து வெளியேறி வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏகப்பட்ட சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் தங்களது ஓய்வை அறிவித்திருந்த வேளையில் தற்போது பல ஆண்டுகால அனுபவத்தை பெற்ற நட்சத்திர தென்னாப்பிரிக்க வீரர் ஒருவரும் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

amla 1

- Advertisement -

அந்த வகையில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக கடந்த 2004-ஆம் ஆண்டு அறிமுகமான ஹசிம் ஆம்லா சர்வதேச கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்காக 124 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 9282 ரன்கள் குவித்துள்ளார். அதேபோன்று 181 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 8113 ரன்களை குவித்துள்ளார்.

மேலும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1277 ரன்களை குவித்துள்ளார். இப்படி மூன்று விதமான சர்வதேச போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடியுள்ள அவர் ஐபிஎல் போன்ற வெளிநாட்டில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடி உள்ளார்.

amla-1

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர் கடந்த சில ஆண்டுகளாக கவுண்டி மற்றும் டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார். குறிப்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற கவுண்டி கிரிக்கெட்டில் கூட சர்ரே அணிக்காக அவர் விளையாடியிருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : வீடியோ : ஓரமா போய் பேட்டி எடுங்கப்பா – வெறித்தன ஃபீல்டிங்கில் சிக்கி நேரலையில் விழுந்த பாக் தொகுப்பாளினி

இந்நிலையில் தற்போது அவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 39 வயதான ஹசிம் ஆம்லாவின் இந்த சிறப்பான அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்த மும்பை அணியின் நிர்வாகம் அவரை தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் டி20 லீக்கில் தங்களது அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement