மீண்டும் ஆக்டிங்கை போட்டு கடுப்பேற்றிய ரிஸ்வான்.. ஸ்பாட்டிலேயே கலாய்த்த விராட் கோலி.. நடந்தது என்ன?

Virat Kohli Rizwan
- Advertisement -

ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கூடியிருந்த உலகின் மிகப்பெரிய மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து பேட்டிங்கை துவக்கிய பாகிஸ்தானுக்கு 41 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் இந்தியாவுக்கு சவாலை கொடுக்க துவங்கிய அப்துல்லா ஷபிக்கை 20 ரன்களில் முகமது சிராஜ் அவுட்டாக்க அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் சற்று அதிரடியாக விளையாடிய இமாம்-உல்-ஹக்கை 36 ரன்களில் ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார். அந்த நிலையில் ஏற்கனவே களமிறங்கியிருந்த கேப்டன் பாபர் அசாமுடன் நட்சத்திர வீரர் முகமது ரிஸ்வான் அடுத்ததாக விளையாட களமிறங்கினார்.

- Advertisement -

மீண்டும் ஆக்டிங்:
குறிப்பாக தன்னுடைய பேட்டிங் கார்டை வழக்கம் போல எடுத்த அவர் அதை முடிப்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார். பொதுவாக பேட்ஸ்மேன்கள் களமிறங்கியதும் உடனடியாக எதிரே நிற்கும் நடுவரிடம் தங்களுடைய ஸ்டம்ப்பை தேர்வு செய்வதற்கு ஓரிருமுறை உதவி கேட்பார்கள். ஆனால் முகமது ரிஸ்வான் அதையே காரணமாக வைத்து முதல் பந்தை எதிர்கொள்வதற்கு முன்பாக தரையில் உரசுவதும் உட்காருவதும் எழுந்திருப்பதுமாய் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார்.

அதாவது முந்தைய பந்தில் விக்கெட்டை எடுத்த பவுலரின் கவனத்தை சீர்குலைப்பதற்காக சில நிமிடங்கள் வேண்டுமென்றே அவர் தாமதப்படுத்தியது ரசிகர்களை கடுப்பாக்கியது. அதனால் தம்முடைய கையில் கட்டாத கடிகாரத்தை பார்த்த விராட் கோலி எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வீர்கள் என்று முகமது ரிஸ்வானை கலாய்க்கும் வகையில் ரியாக்சன் கொடுத்து பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

சொல்லப்போனால் கடந்த போட்டியில் சதமடித்த பின் காயத்தை சந்தித்தது போல் முகமத் ரிஸ்வான் நடித்தது வர்ணையாளர்கள் மற்றும் ரசிகர்களை சிரிக்க வைத்தது. மேலும் சில நேரங்களில் அது காயம் சில நேரங்களில் நடிப்பு என்று அவரும் அதை ஒப்புக்கொண்டார். அந்த நிலையில் அதே போன்ற வேலையை இந்த போட்டியிலும் அவர் அரங்கேற்றிய போதிலும் விராட் கோலி அதை நேரடியாக கலாய்த்தார் என்று சொல்லலாம்.

இதையும் படிங்க: தப்பு பண்ணீட்டீங்க இந்தியா.. பாகிஸ்தான் நொறுக்க போறாங்க.. ரோஹித் தவறை விமர்சித்த அக்தர்

அதைத்தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் சிறப்பாக விளையாடிய பாபர் அசாம் 50 ரன்கள் எடுத்ததும் சிராஜ் வேகத்தில் அவுட்டாக அடுத்ததாக வந்த சவுத் ஷாக்கில் 6, இப்திகார் அகமது 3 ரன்களில் குல்தீப் யாதவ் சுழலில் அவுட்டானார்கள். அடுத்த சில ஓவரிலேயே ரிஸ்வான் 49, சடாப் கான் 2 ரன்களில் பும்ரா காலி செய்ததால் சற்று முன் வரை பாகிஸ்தான் 37 ஓவர்களில் 176/7 ரன்களுடன் தடுமாறி வருகிறது.

Advertisement