- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இத்தனை வருஷ கரியரில் விராட் கோலிக்கு இப்படி நடப்பது இதுவே முதல்முறை – பரிதாப விவரம் இதோ

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த 2008-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 294 போட்டிகளில் 13 ஆயிரத்து 886 ரன்களை குவித்துள்ளார். இதில் 50 சதங்களும், 72 அரைசதங்களும் அடங்கும். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள விராட் கோலி மிகப்பெரிய வீரராக பார்க்கப்படுகிறார்.

ஆனாலும் கடந்த சில ஆண்டுகளாகவே இவரது ஆட்டம் சற்று சுமாரான நிலையிலேயே இருந்து வருகிறது. இடையிடையே விராட் கோலி மிகச் சிறப்பான இன்னிங்ஸ் விளையாடி வந்தாலும் தற்போது நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் அவர் மோசமான செயல்பாட்டையே வெளிப்படுத்தி உள்ளார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக அவரது 16 ஆண்டு கால கிரிக்கெட் கரியரில் மோசமான சாதனையை ஒன்றிணையும் இந்த தொடரின் மூலம் அவர் செய்துள்ளார். இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது கொழும்பு நகரில் நடைபெற்று முடிந்தது.

இந்த போட்டியில் 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய இந்திய அணிக்கு மூன்றாவது வீரராக களமிறங்கிய விராட் கோலி 18 பந்துகளை சந்தித்து 20 ரன்கள் மட்டுமே எடுத்து மீண்டும் ஒருமுறை ஏமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் அவர் படைத்த மோசமான சாதனை யாதெனில் :

- Advertisement -

இந்த தொடரில் அவர் விளையாடிய மூன்று போட்டிகளில் 24, 14 மற்றும் 20 என இந்த தொடர் முழுவதுமே அவர் மொத்தமாக 58 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். இதன் மூலம் இந்த தொடரில் விராட் கோலியின் சராசரி 19.33 ஆக இருந்துள்ளது. 16 ஆண்டு கால கிரிக்கெட்டில் இரண்டுக்கு மேற்பட்ட போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இவ்வளவு குறைவான சராசரியை அவர் வைத்திருப்பது இதுவே முதல் முறை.

இதையும் படிங்க : 3 விக்கெட் எடுத்திருந்தாலும் நான் அந்த தப்பை பண்ணிட்டேன்.. அதை கன்ட்ரோல் பண்ணியிருக்கலாம் – ரியான் பராக்

இதற்கு முன்னதாக அவர் அறிமுகமான 2008-ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக ஒரு தொடரில் 31.80 சராசரி வைத்திருந்ததே அவரது மிக குறைவான சராசரியாக இருந்தது. இவ்வேளையில் அதைவிட மோசமான ஆட்டத்தை இந்த தொடரில் அவர் வெளிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -