தெ.ஆ தொடரிலிருந்து வெளியேறும் விராட் கோலி.. காரணம் என்ன? முழுமையான விவரம்

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்த இந்தியா 2011 போல கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவற விட்டது. அதனால் கோடிக்கணக்கான ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் அடுத்ததாக அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது.

அதில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு சூரியகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி களமிறங்கியுள்ளது. இத்தொடரை முடித்துக் கொண்டு தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது.

- Advertisement -

விலகும் விராட் கோலி:
இந்த சுற்றுப்பயணத்தில் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் மீண்டும் முதன்மையான இந்திய அணி களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெறும் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட வெள்ளைப் பந்து தொடர்களில் விராட் கோலி விளையாட மாட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

குறிப்பாக அத்தொடர்களில் ஓய்வெடுக்க விரும்புவதால் விளையாடவில்லை என்று பிசிசிஐயிடம் நேரடியாக தெரிவித்துள்ள விராட் கோலி அடுத்ததாக நடைபெறும் 2 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாட விரும்புவதாக தெரிய வந்துள்ளது. இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி பேசியது பின்வருமாறு. “பிசிசிஐ மற்றும் தேர்வு குழுவினரிடம் அடுத்ததாக தாம் விளையாட விரும்பும் வரை வெள்ளைப் பந்து தொடர்களில் தமக்கு ஓய்வு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்”

- Advertisement -

“அதே சமயம் தற்சமயத்தில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு விரும்புவதாகவும் பிசிசிஐ’யிடம் கூறியுள்ளார். அதன் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுவார்” என்று கூறியுள்ளார். அதாவது 2023 உலகக் கோப்பையில் 765 ரன்கள் எடுத்தும் வெற்றி பெற முடியாத காரணத்தால் ஏமாற்றத்தை சந்தித்த விராட் கோலி தற்சமயத்தில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட விரும்பவில்லை என தெரிகிறது.

இதையும் படிங்க: மும்பை வாங்கிய பாண்டியாவுக்கு மட்டும் ஒரு நியாயமா.. கொல்கத்தா டீம் டைரக்டர் கொதிப்பு

அதனால் அந்த 2 வெள்ளைப்பந்து தொடர்களில் விலகும் அவர் தமக்கு மிகவும் பிடித்த டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். குறிப்பாக தென்னாபிரிக்க மண்ணில் முதல் முறையாக வென்று சரித்திரம் படைப்பதற்காக 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் அங்கமாக நடைபெறும் டெஸ்ட் தொடரில் அவர் விளையாட உள்ளார். முன்னதாக கடந்த முறை தென்னாப்பிரிக்க மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி சர்ச்சைக்குரிய முறையில் கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement