தேவையில்லாத மோசமான சாதனை பட்டியலில் சேவாக் மற்றும் ரெய்னா உடன் இணைந்த – விராட் கோலி

kohli
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த 2019-ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது சதமடித்தார். அதன் பிறகு கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடிக்காமல் தவித்து வரும் விராட் கோலி தனது 71 ஆவது சதத்திற்காக மிக நீண்ட காலமாகவே காத்திருக்கிறார். மேலும் அவரது பேட்டில் இருந்து எப்போது சதம் வரும் என்று ரசிகர்களும் எதிர்பார்த்து வருகின்றனர். அந்த வகையில் இந்த தென்னாப்பிரிக்க தொடரில் நிச்சயம் விராத் கோலி சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த வேளையில் ஒருநாள் கிரிக்கெட்டில் மோசமான சாதனையை ஒன்றில் அவர் தற்போது இணைந்துள்ளார்.

dhawan

- Advertisement -

அதன்படி இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் தவான் ஆட்டமிழந்து வெளியேறியதும் களத்திற்குள் வந்த கோலி 5 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன்மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி 14-வது முறையாக டக் அவுட் ஆகியுள்ளார். இதுவரை 256 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 12220 ரன்களை குவித்துள்ளார். இதில் அவர் 14-வது முறையாக நேற்று டக் ஆன கோலி இந்திய அணி சார்பாக அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களின் பட்டியலில் ரெய்னா, சேவாக், ஜாகீர் கான் ஆகியோருடன் இணைந்துள்ளார்.

kohli 1

இவர்கள் அனைவருமே ஒருநாள் கிரிக்கெட்டில் 14 முறை டக் அவுட் ஆகி உள்ளனர். இந்த பட்டியலில் முதலிடத்தில் ஹர்பஜன் சிங் 17 முறையும், கங்குலி 16 முறையும் டக் அவுட்டாகி முதல் இரண்டு இடங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : ரிஷப் பண்ட் ஆடுறத பாத்தா எனக்கு அவர் தான் நியாபகத்துக்கு வாராரு – ஜாஹீர் கான் பெருமிதம்

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற இந்த முக்கியமான இரண்டாவது போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 287 ரன்கள் குவிக்க அடுத்ததாக விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 48.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 288 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement