ரோஹித், ரிங்கு, முகேஷ் இல்ல.. அவரால் தான் 3வது டி20 சூப்பர் ஓவருக்கே போச்சு.. அஸ்வின் பாராட்டு

Ravichandran Ashwin
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெற்ற ஆப்கானிஸ்தான் டி20 கிரிக்கெட் தொடரில் 3 – 0 என்ற கணக்கில் இந்தியா வெற்றியைக் கண்டது. குறிப்பாக பெங்களூருவில் நடைபெற்ற கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா எடுத்த 212 ரன்களை ஆப்கானிஸ்தானும் 20 ஓவரில் சரியாக எடுத்தது. அதனால் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் இரு அணிகளும் தலா 12 ரன்கள் எடுத்தன.

அதன் காரணமாக மீண்டும் நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் இந்தியா நிர்ணயித்த 12 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தான் 1 ரன் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த வகையில் ரசிகர்களுக்கு உச்சகட்ட விருந்து படைத்த அப்போட்டியில் ரோகித் சர்மா 2 சூப்பர் ஓவர் உட்பட 3 முறை பேட்டிங் செய்தும் 129*, 13*, 11* என பெரிய ரன்கள் குவித்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

சூப்பர் ஓவருக்கு காரணமானவர்:
அதே போல அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய ரிங்கு சிங் 69* ரன்கள் எடுத்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். இந்நிலையில் பெங்களூருவில் நடைபெற்ற 3வது டி20 போட்டி விராட் கோலி அபாரமாக ஃபீல்டிங் செய்த காரணத்தினால் மட்டுமே சமனில் முடிந்து சூப்பர் ஓவர் வரை சென்றதாக ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.

இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அப்போட்டியில் முக்கியமான நேரத்தில் விராட் கோலி சூப்பர்மேன் போல பறந்து சிக்சரை தடுத்தார். அந்த காரணத்தால் தான் அப்போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது. அதில் இந்தியாவும் வென்றது. மேலும் பேட்டிங்கில் எப்போதுமே விராட் கோலி தொடர்ச்சியாக ரன்களை அடிக்கக் கூடியவர். டி20 கிரிக்கெட்டில் பலரும் தொடர்ச்சியாக அடிக்க தடுமாறும் நிலையில் விராட் கோலி தொடர்ந்து நல்ல சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் குவித்து வருகிறார்” என்று கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல வாஷிங்டன் சுந்தர் வீசிய 17வது ஓவரின் ஒரு பந்தில் கரீம் ஜானத் அதிரடியான சிக்சரை பறக்க விட்டார். ஆனால் அதை பவுண்டரி எல்லையில் நின்ற விராட் கோலி சரியாக தாவி காற்றில் பறந்து தடுத்து நிறுத்தி 5 ரன்களை சேமித்தார். குறிப்பாக பும்ரா பந்து வீசுவது போல அவர் சிக்ஸரை தடுத்தது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: 2024 டி20 உ.கோ : ரிஷப் பண்ட்க்கு சான்ஸ் கிடைப்பது கஷ்டம்.. காரணம் இது தான்.. ஜஹீர் கான் கருத்து

அத்துடன் நஜிபுல்லா ஜாட்ரான் கொடுத்த கடினமான கேட்ச்சை ரன்னிங்கிலேயே பிடித்த விராட் கோலி சூப்பர் ஓவரில் குல்பதின் ஃநைபை ரன் அவுட் செய்தார். அந்த வகையில் கோல்டன் டக் அவுட்டானாலும் ஃபீல்டிங் துறையில் அபாரமாக செயல்பட்டு வெற்றியில் முக்கிய பங்காற்றிய விராட் கோலி அப்போட்டிக்கான சிறந்த ஃபீல்டர் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement