IND vs ENG : என்றுமே விராட் கோலி லீடர் தான். இந்திய வீரர்களுக்கு ஊக்கம் கொடுத்த ஸ்பீச் – வைரலாகும் வீடியோ

Virat-Kohli
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் தலைமையில் இங்கிலாந்து புறப்பட்டு சென்ற இந்திய அணியானது தற்போது நடைபெற்று வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக கவுண்டி அணியுடன் இணைந்து பயிற்சி போட்டியில் விளையாடியது. அப்போது அந்த பயிற்சி போட்டியின் முதல் நாள் முடிவில் ரோகித் சர்மாவிற்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் தற்போது நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியை அவர் தவறவிட்டார்.

இதன் காரணமாக ரோகித் சர்மாவிற்கு பதிலாக புதிய கேப்டனாக அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா நியமிக்கப்பட்டார். கேப்டன்சி விடயத்தில் எந்த ஒரு அனுபவமும் இல்லாத பும்ரா இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 36-ஆவது கேப்டனாக பொறுப்பேற்றார். இதுவரை முதல் தர கிரிக்கெட், ஐபிஎல், லிஸ்ட் ஏ என எந்த ஒரு பார்மெட்டிலும் பும்ரா கேப்டன்சி செய்தது கிடையாது. ஆனாலும் அவரது திறமை மீதுள்ள நம்பிக்கை காரணமாகவும், எதிர்காலத்தில் அவர் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட வாய்ப்பு இருப்பதன் காரணமாகவும் அவருக்கு இந்த கேப்டன் பதவி வழங்கப்பட்டது.

- Advertisement -

அவரது தலைமையில் தற்போது இந்திய அணியில் பல சீனியர் வீரர்களும், முன்னாள் கேப்டனுமான விராத் கோலியும் விளையாடி வருகின்றனர். அப்படி இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 416 ரன்கள் எடுத்து ஒரு நல்ல நிலையில் உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது முதலில் விளையாடி வரும் இங்கிலாந்து அணியானது 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனான பும்ரா பேட்டிங்கில் 16 பந்துகளை சந்தித்து 31 ரன்கள் குவித்தது மட்டுமின்றி பந்து வீச்சிலும் இதுவரை மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து விட்டு அடுத்ததாக பந்து வீச மைதானத்திற்குள் வரும் போது விராட் கோலி செய்த செயல் ஒன்று தற்போது இணையத்தில் வீடியோவாக வரலாகி வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் எப்பொழுதுமே அணியின் வீரர்கள் மைதானத்திற்குள் வரும் போது ஒரு அணியின் கேப்டன் என்பவர் முன் நின்று அணி வீரர்களுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு ஸ்பீச் அளிக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் பும்ரா இந்த போட்டியில் புதிய கேப்டனாக பதவி ஏற்றதால் அவர் மைதானத்தில் நடக்கும் டீம் மீட்டிங்கில் வீரர்களை ஊக்கப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க : அவரு இப்போலாம் ப்ராப்பர் பேட்ஸ்மேனா மாறிட்டாரு. அவருக்கு எதிரா பந்துவீசுவது கஷ்டமா இருக்கு – ஆண்டர்சன் பாராட்டு

ஆனால் அவ்வேளையில் அணியின் முன்னணி கேப்டனான விராட் கோலி பும்ரா சார்பாக அணி வீரர்களுக்கு உற்சாக உரை அளித்தார். அவரது இந்த செயலை கண்ட கோலியின் ரசிகர்கள் தற்போது இணையத்தில் இந்த வீடியோவை அதிக அளவில் பகிர்ந்து விராட் கோலி என்றுமே ஒரு லீடர் தான் என்று கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்ற இந்திய டெஸ்ட் அணியை கேப்டனாக வழிநடத்தியவர் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement