அவரு இப்போலாம் ப்ராப்பர் பேட்ஸ்மேனா மாறிட்டாரு. அவருக்கு எதிரா பந்துவீசுவது கஷ்டமா இருக்கு – ஆண்டர்சன் பாராட்டு

James-Anderson
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் 146 ரன்களை குவித்ததும், இறுதி நேரத்தில் கேப்டன் பும்ரா அதிரடியாக விளையாடியதும், ரவீந்திர ஜடேஜாவின் பொறுப்பான ஆட்டம் போன்றவற்றாலும் இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்து தற்போது நல்ல நிலையில் உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி 98 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா ஆகியோரது ஜோடி ஆறாவது விக்கெட்க்கு 222 ரன்கள் குவித்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டது.

Rishabh Pant Ind vs ENg Ravindra Jadeja

- Advertisement -

இந்த போட்டியில் ரிஷப் பண்ட் அடித்த சதம் மற்றும் பும்ரா ஒரே ஓவரில் அடித்த 35 ரன்கள் என்று பெரிய அளவில் பேசப்பட்டு வரும் அதேவேளையில் ஜடேஜா அடித்த 104 ரன்களும் மிக முக்கியமான ஒரு விடயமாக பார்க்கப்படுகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் இவ்வளவு பெரிய ஸ்கோரை அடிக்கவும், நல்ல நிலையில் இருக்கவும் ஜடேஜாவின் பங்கும் பெரிது என்றால் அது மிகையல்ல.

இந்நிலையில் ஜடேஜாவின் இந்த அருமையான சதம் குறித்து பேசியுள்ள இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறுகையில் : முன்பெல்லாம் ஜடேஜா இந்திய அணிக்காக எட்டாவது இடத்தில் பேட்டிங் இறங்கியதால் பவுலர்களை வைத்து விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதனால் எளிதாக தனது பேட்டினை சுழற்ற முடியாத சூழலில் இருந்தார்.

Ravindra-Jadeja

ஆனால் தற்போது இந்திய அணிக்காக அவர் 7-ஆவது இடத்தில் இறங்கி ஒரு ப்ராப்பரான பேட்ஸ்மேன் எவ்வாறு விளையாடுவாரோ அதேபோன்று விளையாடுகிறார். எனவே அவருக்கு எதிராக பந்து வீசுவது எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார். இந்நிலையில் ஆண்டர்சனின் இந்த பாராட்டு குறித்து பேசியுள்ள ஜடேஜா மனம்திறந்த சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : எப்பொழுதெல்லாம் நீங்கள் ரன் குவிக்கிறீர்களோ அப்போதெல்லாம் உங்களை ப்ராப்பரான பேட்ஸ்மேன்கள் என்று கூறுவார்கள். ஆனால் நான் எப்போதுமே என்னுடைய சிறப்பான பேட்டிங்கை வெளிக்கொண்டு வரவே நினைக்கிறேன். மேலும் களத்தில் நீண்ட நேரம் நின்றால் நிறைய ரன்கள் வரும் என்றும் ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க முடியும் என்பதை மட்டுமே நம்பி நான் விளையாடுகிறேன்.

இதையும் படிங்க : ஸ்டூவர்ட் பிராடு ஓவரை அசால்ட் செய்த பும்ரா. ஒரே ஓவரில் 35 ரன்கள் கொடுத்தது பற்றி பேசிய – ஜேம்ஸ் ஆண்டர்சன்

ஜேம்ஸ் ஆண்டர்சன் என்னுடைய பேட்டிங்கை பற்றி பாராட்டியுள்ளது மிகவும் மகிழ்ச்சி. 2014 ஆம் ஆண்டு எங்களுக்குள் மிக மோசமான சம்பவங்கள் நடந்தது. ஆனால் இந்தத் தொடரில் அவர் என்னுடைய திறனை மதித்து பாராட்டியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என ஜடேஜா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement