ஸ்டூவர்ட் பிராடு ஓவரை அசால்ட் செய்த பும்ரா. ஒரே ஓவரில் 35 ரன்கள் கொடுத்தது பற்றி பேசிய – ஜேம்ஸ் ஆண்டர்சன்

James-Anderson-and-Stuart-Broad
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பும்ரா 10-ஆவது வீரராக களமிறங்கி 16 பந்துகளை சந்தித்த நிலையில் 2 சிக்ஸர் மற்றும் நான்கு பவுண்டரி என அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 31 ரகளை சேர்த்தார். அதிலும் குறிப்பாக ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரு ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகளுடன் 35 ரன்கள் அடித்து பும்ரா உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் பிராட் ஓவரில் யுவராஜ் சிங் 6 சிக்ஸர்கள் அடித்ததை தொடர்ந்து தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவரது ஒரே ஓவரில் 35 ரன்கள் சென்றுள்ளது ஒரு மோசமான சாதனையாக மாறியுள்ளது.

Bumrah

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை 550 விக்கெட்டுகள் வீழ்த்திய அனுபவம் வாய்ந்த வீரராக இருக்கும் பிராட் இப்படி ஒரு மோசமான சாதனையை செய்துள்ளது சற்று வருத்தமான விடயம் தான். இந்நிலையில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய இந்த ஓவர் குறித்தும் பும்ரா அந்த ஓவரில் விளையாடியது குறித்தும் தற்போது பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளத்தில் உலா வரும் வேளையில் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரும், பிராட்டின் சக நண்பருமான ஜேம்ஸ் ஆண்டர்சன் ஸ்டூவர்ட் பிராட் வீசிய அந்த ஓவர் குறித்து தற்போது பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

கிரிக்கெட்டில் இது போன்று சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். இன்றைய நாள் ஸ்டூவர்ட் பிராடிற்கு மிகவும் மோசமாக அமைந்து விட்டது. இல்லையெனில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்காது. இன்றைய போட்டியில் என்னை பொறுத்தவரை அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று நான் கூறுவேன். ஏனெனில் அவரது பந்து வீச்சில் பல பந்துகள் டாப் எட்ஜ் ஆகினாலும் ஃபீல்டர் இல்லாத திசையை நோக்கி சென்றது.

Stuart Broad Yuvraj SIngh Jasprit bumrah

அதேபோன்று அவரது பந்துவீச்சு சிறப்பாக இருந்தும் அந்த ஓவரில் ரன்கள் சென்றது எதார்த்தமான ஒன்றுதான். ஸ்டுவர்ட் பிராட் வீசிய அந்த ஓவரை சிறப்பாக எதிர்கொண்ட பும்ரா ரன்களை குவிக்க வேண்டும் என்பதில் மட்டுமே கவனமாய் இருந்ததால் அந்த ஓவரில் அதிக அளவு ரன்கள் கசிந்தது. ஸ்டூவர்ட் பிராடு இந்த மோசமான ஓவர் பற்றி எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. தொடர்ந்து அவர் சிறப்பாக பந்து வீசுவார் என்று நம்பிக்கை என்னிடம் உள்ளது.

- Advertisement -

என்னை பொறுத்தவரை அவருக்கு அந்த ஒரு ஓவர் மட்டுமின்றி இன்றைய நாள் அவருக்கு அதிர்ஷ்டம் அற்றதாக சென்று விட்டது அவ்வளவுதான் என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறினார். இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விளையாடி முடித்துள்ள இந்திய அணியானது ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகியோரது சதத்தினாலும், பும்ராவின் அதிரடியாலும் முதல் இன்னிங்சில் 416 ரன்களை குவித்துள்ளது.

இதையும் படிங்க : ரிஷப் பண்ட் எதும் பண்ணல. தப்பு பண்ணது எல்லாம் பவுலர்ஸ் தான் – வம்பிழுத்து வாங்கி கட்டிக்கொண்ட முன்னாள் பாக் வீரர்

அதேவேளையில் தற்போது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிவரும் இங்கிலாந்து அணியானது இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெடுகளை இழந்து 84 ரன்களுடன் உள்ளது. அதேபோன்று இந்திய அணியை விட தற்போது இங்கிலாந்து அணி 332 ரன்கள் பின்தங்கி உள்ளது. அதனை தொடர்ந்து இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement