- Advertisement -
இந்திய கிரிக்கெட்

உங்கள மாதிரி சேண்ட்பேப்பரால் ஏமாத்தாம.. நாட்டுக்காக நேரா தான் மோதுனேன்.. ஆஸிக்கு விராட் கோலி பதிலடி

ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 3 – 1 என்ற கணக்கில் இந்தியா தோற்றது. அதனால் பத்து வருடங்கள் கழித்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலியாவிடம் கோட்டை விட்டு இந்தியா ஏமாற்றத்தை சந்தித்தது. மேலும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இந்தியா இழந்தது.

அந்தத் தோல்விக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சுமாராக விளையாடியது முக்கிய காரணமாக அமைந்தது. அதற்கிடையே நான்காவது போட்டியில் 19 வயது ஆஸ்திரேலிய இளம் வீரர் சாம் கோன்ஸ்டஸ் தோளில் அவர் இடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்காக ஐசிசி அவருக்கு 20% போட்டி சம்பளத்தை அபராதமாக விதித்தது.

- Advertisement -

ஆஸி ரசிகர்கள் எதிர்ப்பு:

அப்போதிலிருந்தே ஆஸ்திரேலிய ரசிகர்கள் மைதானத்தில் விராட் கோலிக்கு எதிராக கூச்சலிட்டு வந்தார்கள். அதே போல விராட் கோலியை கோமாளி என்று அந்நாட்டைச் சேர்ந்த பிரபல பத்திரிக்கை பகிரங்கமாக விமர்சித்தது. அந்த சூழ்நிலையில் கடைசி போட்டியில் சிட்னி மைதானத்தில் விளையாடிய விராட் கோலியை மீண்டும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் கூச்சலிட்டு விமர்சித்தார்கள்.

குறிப்பாக 36 வயதாகும் அவர் மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடுவது சந்தேகமாக பார்க்கப்படுகிறது. எனவே கடைசி நாளில் இவரை விடக்கூடாது என்ற நோக்கத்துடன் ஆஸ்திரேலியா ரசிகர்கள் நாலாபுறமும் சேர்ந்து கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதற்காக அசராத விராட் கோலி தன்னுடைய கால் சட்டையில் இருந்த 2 காலியான பாக்கெட்டுகளை எடுத்து ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு காண்பித்து பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

கோலியின் பதிலடி:

குறிப்பாக 2018ஆம் ஆண்டு ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் பந்தை சேதப்படுத்தி தடை பெற்றார்கள். அப்படிப்பட்ட நிலையில் 2019 உலகக் கோப்பையின் போது ஸ்மித்துக்கு எதிராக இந்திய ரசிகர்கள் கூச்சலிட்டனர். அப்போது அவர்களை விமர்சிக்காமல் பாராட்டுமாறு விராட் கோலி கேட்டுக் கொண்டதை மறக்க முடியாது. ஆனால் அதையெல்லாம் மறந்த ஆஸ்திரேலிய ரசிகர்கள் இங்கே விராட் கோலியை விமர்சித்தார்கள்.

இதையும் படிங்க: அந்த 2 பேர் இருக்க பும்ராவிடம் மோத சாம் கோன்ஸ்டஸ் யாரு? ஆஸி கோச்சுக்கு கம்பீர் பதிலடி

அதற்காக அசராத விராட் கோலி “நான் ஒன்றும் உங்களைப் போல் உப்பு காகிதத்தை வைத்து பந்தை சேதப்படுத்தி ஏமாற்றாமல் இந்தியாவுக்கு பின்னடைவை கொடுத்தவருடன் நேருக்கு நேராக தோளில் தான் மோதினேன்” என்ற வகையில் ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்தார். மொத்தத்தில் இந்த தொடர் விராட் கோலிக்கு மிகவும் ஏமாற்றமாக அமைந்தது. அதனால் அவரை தற்போது இந்திய அணி ரசிகர்களும் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -