ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற முடிந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 3 – 1 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. அதனால் பத்து வருடங்கள் கழித்து பார்டர் காவாஸ்கர் கோப்பையை இந்தியா வெல்ல முடியாமல் ஆஸ்திரேலியாவிடம் கொடுத்தது. மேலும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கும் இந்தியா தகுதி பெற முடியாமல் வெளியேறியது.
முன்னதாக அத்தொடரின் கடைசி போட்டியின் முதல் நாளின் முடிவில் உஸ்மான் கவாஜா வேண்டுமென்றே தாமதத்தை செய்தார். அப்போது என்னவாயிற்று என்று இந்திய கேப்டன் பும்ரா அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதற்கு எதிர்ப்புறம் இருந்த சாம் கோன்ஸ்டஸ் தேவையின்றி அவரிடம் சில வார்த்தைகளை சொல்லி வம்பிழுத்தார்.
நீங்க யார்:
அதற்கு பும்ராவும் பதிலடி கொடுக்க சென்ற போது நடுவர் உள்ளே புகுந்து வாக்குவாதத்தை நிறுத்தினார். அடுத்த சில பந்துகளில் கவாஜாவை அவுட்டாக்கிய பும்ரா அவருக்கு சரியான பதிலடி கொடுத்தார். அப்படியே இந்திய அணியினரும் அவரிடம் மொத்தமாக சென்று வெறித்தனமான பதிலடி கொடுத்தனர். ஆனால் இந்திய அணியினர் தங்களுடைய வீரரிடம் மிரட்டும் வகையில் நடந்து கொண்டதாக ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் விமர்சித்தார்.
எனவே இந்திய அணிக்கு ஐசிசி தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்நிலையில் அம்பயர் மற்றும் உஸ்மான் கவாஜா – பும்ரா இடையே பேச்சுவார்த்தை நடக்கும் போது இடையே வம்புக்கு வர சாம் கோன்ஸ்டஸ் யார்? என அவருக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்ருமாறு.
கம்பீர் பதிலடி:
“அது கடினமான ஆண்களால் விளையாடப்பட்ட கடினமான விளையாட்டு. அங்கே நீங்கள் மிகவும் மிருதுவாக இருக்க முடியாது. அது அவ்வளவு எளிமையாகும். மற்றபடி அங்கு மிரட்டும் அளவுக்கு எதுவும் இருந்ததாக எனக்கு தெரியவில்லை. உஸ்மான் கவாஜா நேரத்தை எடுத்துக் கொண்டிருக்கும் போது பும்ராவிடம் பேச கோன்ஸ்டஸ்க்கு எந்த உரிமையும் கிடையாது”
இதையும் படிங்க: குழப்பமா இருக்கு.. இந்தியர் என்பதால் தன்னை அவமானப்படுத்திய ஆஸ்திரேலியா.. மீது கவாஸ்கர் அதிருப்தி
“பும்ராவிடம் தேவையின்றி பேச அவருக்கு எந்த வேலையும் கிடையாது. அது நடுவர் மற்றும் கவாஜா ஆகியோருடைய வேலை” என்று பதிலடி கொடுத்தார். மொத்தத்தில் கௌதம் கம்பீர் வழிகாட்டுதலில் இந்தியா இந்தத் தொடரில் சுமாரான தோல்வியை சந்தித்துள்ளது. அதனால் நீங்களும் தேவையின்றி பேசாமல் செயலில் காட்டுங்கள் என்று அவரை ரசிகர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.



