ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரராக விளையாடி வரும் விராட் கோலி ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் எத்தனையோ பிரமாண்டமான சாதனையை நிகழ்த்தியுள்ள வேளையில் நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியதன் மூலம் மாபெரும் வரலாற்று சாதனை ஒன்றினை முதல் நபராக நிகழ்த்தி அசத்தியுள்ளார்.
விராட் கோலி நிகழ்த்திய பிரமாண்ட சாதனை :
அந்த சாதனை குறித்த விவரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று பெங்களூரு மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடரின் 24-ஆவது போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை குவித்தது.
பின்னர் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 17.5 ஓவர்களில் 4 விக்கெடுகளை மட்டும் இழந்து 169 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெங்களூரு அணி தோல்வியை சந்தித்து இருந்தாலும் அந்த அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி நிகழ்த்திய அசத்தல் சாதனை குறித்த விவரம் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் நேற்றைய போட்டியின் போது ஆர்.சி.பி அணியின் துவக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி 14 பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என 22 ரன்கள் அடித்து விப்ராஜ் நிகம் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இந்த இன்னிங்ஸ் மூலம் அவர் படைத்த சாதனை யாதெனில் :
இந்த போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக இரண்டு சிக்சர் மற்றும் ஒரு ஃபோர் என மூன்று பவுண்டரிகளை அடித்த விராட் கோலி ஐபிஎல் தொடரில் முதல் நபராக 1000 பவுண்டரிகளை விளாசிய வீரர் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஒட்டுமொத்தமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 721 ஃபோர்களையும், 279 சிக்ஸர்களையும் விளாசியுள்ள விராட் கோலி 1000 பவுண்டரிகளை அடித்துள்ளார்.
இதையும் படிங்க : பிட்ச்ல எந்த குறையும் இல்ல.. நாங்க இந்த போட்டியில் தோக்க இதுவே காரணம் – ராஜத் பட்டிதார் பேட்டி
இவருக்கு அடுத்து ஷிகர் தவான் 920 பவுண்டரிகளுடனும், டேவிட் வார்னர் 899 பவுண்டரிகளிடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். அதே வேளையில் ஒரே அணிக்காக 1000 பவுண்டரிகளை அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



