பிட்ச்ல எந்த குறையும் இல்ல.. நாங்க இந்த போட்டியில் தோக்க இதுவே காரணம் – ராஜத் பட்டிதார் பேட்டி

Rajat Patidar
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 24-வது வீக் போட்டியானது நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் பட்டேல் முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார்.

டெல்லி அணிக்கெதிரான தோல்விக்கு இதுவே காரணம் : ரஜத் பட்டிதார் பேச்சு :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை குவித்தது. பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக டிம் டேவிட் மற்றும் பிலிப் சால்ட் ஆகியோர் தலா 37 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது துவக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 58 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து பெரிய சரிவை சந்தித்து இருந்தாலும் அதன் பின்னர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 17.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 169 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது.

இந்த போட்டியின் போது டெல்லி அணி சார்பாக கே.எல் ராகுல் 93 ரன்களையும், ஸ்டப்ஸ் 38 ரன்களையும் குவித்து ஆட்டமிழக்காமல் அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த இந்த தோல்வி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறுகையில் : இந்த மைதானத்தை பார்க்கும் போது சற்று வித்தியாசமாக இருந்தது. ஆனாலும் பேட்டிங் செய்ய இந்த ஆடுகளும் மிகச் சிறப்பாக இருந்ததாகவே உணர்கிறேன்.

- Advertisement -

ஆனால் நாங்கள் இந்த போட்டியில் சரியாக பேட்டிங் செய்யாததாலே தோல்வியை சந்தித்துள்ளோம். எங்களது அணியின் வீரர்கள் இந்த போட்டியில் நல்ல மனநிலையுடன் இருந்ததால் பந்தை அடித்து விளையாட வேண்டும் என்ற இன்டென்ட்டுடன் விளையாடினர். ஆனால் அப்படி அட்டாக் செய்து விளையாடும்போது இப்படி விக்கெட்டுகள் சரியும் என்று நினைக்கவில்லை.

இதையும் படிங்க : ஆர்சிபியை விட எனக்கு தான் இது நல்லா தெரியும்.. கீப்பரா இருப்பதால் ஈஸியா ஜெயிக்க வெச்சுட்டேன்.. ராகுல் பேட்டி

நாங்கள் ஒரு நல்ல பேட்டிங் லைனப்பை வைத்திருந்தாலும் மைதானத்தின் தன்மையை சற்று கணித்து அதன் பிறகு பாசிட்டிவாக விளையாட வேண்டும் அதை செய்ய தவறி விட்டோம். இறுதியில் பின் வரிசையில் டிம் டேவிட் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தார். அதேபோன்று பந்துவீச்சிலும் நாங்கள் பவர்பிளேவில் சிறப்பாக துவங்கியிருந்தோம். அதன் பின்னரே இறுதிநேரத்தில் போட்டி எங்களிடமிருந்து அவர்கள் பக்கம் சென்றது என ரஜத் பட்டிதார் வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement