அந்த சீரிஸ்ல பிளாப் ஆன விராட் கோலியிடம் வீக்னெஸ் இருக்கு, ஆனா சச்சின் மாதிரி கில் தரமானவர் – முன்னாள் இந்திய வீரர் அதிரடி

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை கிரிக்கெட் அணிகளில் ஒன்றாக திகழும் இந்தியா உலக அளவில் மகத்தான பேட்ஸ்மேன்களை உருவாக்கும் நாடாக இருந்து வருகிறது. அந்த வகையில் 80களில் அசுர வேகத்தில் வீசக்கூடிய வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை ஹெல்மெட் போடாமலேயே எதிர்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்கள் அடித்த முதல் வீரராக சாதனை படைத்த சுனில் கவாஸ்கரை மிஞ்சும் வகையில் 90களில் விஸ்வரூபம் எடுத்த சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தலா 10000 ரன்களை அடித்து 100 சதங்களை விளாசி இந்தியாவுக்கு ஏராளமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரலாற்றின் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுத்தார்.

- Advertisement -

குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் குதிரை கொம்பாக கருதப்பட்ட இரட்டை சதத்தை அடிக்கும் கலையை உலகிற்கே கற்றுக் கொடுத்த அவர் இந்திய கிரிக்கெட்டின் கடவுளாக போற்றப்படும் அளவுக்கு எளிதில் எட்ட முடியாத சாதனைகளை படைத்தார். அதை தொடர்ந்து 2008 அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக வென்று சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி 2013இல் சச்சின் ஓய்வுக்கு பின் அவரது இடத்தில் அவரைப் போலவே ரன் மெஷினாக உலகின் அனைத்து டாப் பவுல்களையும் சிறப்பாக எதிர்கொண்டு 25000+ ரன்களையும் 75 சதங்களையும் அடித்து நவீன கிரிக்கெட்டின் நாயகனாக இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

வீக்னெஸ் இல்லாத கில்:
குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10000 ரன்களை அடித்த அவர் சச்சினை மிஞ்சி 110 சதங்கள் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நிலையில் 2018 அண்டர்-19 உலகக்கோப்பை இந்தியா வெல்வதற்கு தொடர் நாயகன் விருது வென்று சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான சுப்மன் கில் 2021 காபா வெற்றியில் 91 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றி கடந்த ஒரு வருடத்தில் டெஸ்ட், ஒருநாள், டி20, மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக சதங்களை அடித்து பெரிய ரன்களை எடுத்து வருகிறார்.

SHubman Gill Sachin Tendulkar

அதனால் சச்சின், விராட் கோலி வரிசையில் இந்திய பேட்டிங் துறையின் அடுத்த சூப்பர் ஸ்டாராக சுப்மன் கில் வருவார் என்று நிறைய கணிப்புகளும் பாராட்டுகளும் காணப்படுகின்றன. இந்நிலையில் 2014 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் தடுமாறிய விராட் கோலியின் பேட்டிங்கில் சில வீக்னஸ் இருப்பதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறியுள்ளார். ஆனால் சச்சின் போல சுப்மன் கில் பேட்டிங்கில் பெரும்பாலும் குறைகள் இல்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்ருமாறு.

- Advertisement -

“சச்சின் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட பேட்ஸ்மேனாக இருந்தார். ஒருவேளை நான் சச்சினுடன் விராட் கோலியை ஒப்பிட்டால் அவரிடம் சில வீக்னெஸ் இருப்பதை உணரலாம். குறிப்பாக 2014 இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு விராட் கோலி ஃபார்மின்றி சென்றார். அங்கே அவரை ஜேம்ஸ் ஆண்டர்சன் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் ரொம்பவே திணறடித்தார். அதற்கு விராட் கோலி பதில் சொல்ல முடியாமல் தவித்தார். மொத்தத்தில் அந்தத் தொடர் அவருக்கு மிகவும் பிளாப்பாக அமைந்தது”

Kaif

“ஆனால் சுப்மன் கில் பேட்டிங் டெக்னிக் கிட்டத்தட்ட சச்சின் டெண்டுல்கர் போலவே இருப்பதாக நான் உணர்கிறேன். குறிப்பாக உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் இந்த சமயத்தில் அவரை எளிதில் அவுட்டாக்குவது மிகவும் கடினமாகும். ஏனெனில் அவருடைய பேட்டிங்கில் பெரிய அளவில் எந்த பலவீனமும் இல்லை. விராட் மற்றும் சச்சின் ஆகிய இருவருமே ஜாம்பவான்கள். அவர்கள் இருவருடனும் நான் இணைந்து விளையாடியுள்ளேன். ஆனால் விராட் கோலியிடம் லேசான வீக்னெஸ் இருக்கிறது”

இதையும் படிங்க: திறமை இருந்தும் பணம் தரும் டி20க்காக நீங்க டெஸ்ட் கிரிக்கெட்டை விட்ருக்க கூடாது – இந்திய வீரர் மீது லன்ஸ் க்ளூஸ்னர் ஏமாற்றம்

“மறுபுறம் சச்சின் டெண்டுல்கர் போன்ற மகத்தானவராக உருவாகும் வழியில் சுப்மன் கில் இருக்கிறார். பேட்டிங் டெக்னிக் மற்றும் மனதளவில் அவர் மிகவும் வலுவானவராக இருக்கிறார்” என்று கூறினார். முன்னதாக ஓரிரு வருடங்கள் சிறப்பாக செயல்பட்டால் போதாது 2 – 3 வருடங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே சச்சின், விராட் கோலி போன்ற ஜாம்பவான்களுடன் சுப்மன் கில்லை ஒப்பிட வேண்டுமென முன்னாள் கேப்டன் கபில் தேவ் சமீபத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement