- Advertisement -
இந்திய கிரிக்கெட்

என்னதான் சொல்லுங்க கோலியிடம் அந்த பழைய பஃயர் இல்லை, வரவும் வராது – முன்னாள் இந்திய வீரர் ஓப்பன்டாக்

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி நவீன கிரிக்கெட்டில் இந்தியா கண்டெடுத்த மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் முதன்மையானவராக போற்றப்படுகிறார். ஏனெனில் கடந்த 10 வருடங்களாக 3 வகையான இந்திய அணியிலும் ரன் மெஷினாக 23000+ ரன்களையும் 70 சதங்களை விளாசி நிறைய சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து தன்னை உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனாக நிரூபித்துள்ளார். மேலும் 2017 முதல் கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் உலக கோப்பையை வெல்லாவிட்டாலும் 3 வகையான கிரிக்கெட்டிலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார்.

அப்படி பொறுப்பேற்ற அத்தனை வேலைகளையும் அசத்தலாக செய்ததால் ஏற்பட்ட பணிச்சுமை அவரது அற்புதமான கேரியரில் 2019க்குப்பின் சதத்தை அடிக்க விடாமல் மெகா வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து விடுபடுவதற்காக இந்தியா மற்றும் ஐபிஎல் தொடரில் வகித்து வந்த கேப்டன்ஷிப் பொறுப்புகளை ராஜினாமா செய்து சாதாரண வீரராக விளையாடத் தொடங்கிய அவர் விரைவில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் ஐபிஎல் 2022 தொடரில் 3 கோல்டன் டக் அவுட்டாகி சமீபத்திய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அரைசதம் கூட அடிக்காமல் எதிர்பார்த்ததை விட சுமாராக செயல்பட்ட அவரை பெரிய பெயரை வைத்துக் கொண்டு பெரிய ரன்களை அடிக்காமல் இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க விடாமல் எத்தனை நாட்கள் அணியில் காலத்தை தள்ளுவீர்கள் என்ற வகையில் கபில் தேவ் போன்ற நிறைய முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

பார்முக்கு திரும்புவாரா:
இத்தனைக்கும் இடையிடையே 40, 50 போன்ற ரன்களை அடித்து 2020 முதல் இப்போது வரை சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இந்திய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் டாப் 5 இடத்தில் இருக்கும் அவரை சதமடிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக பார்ம் அவுட் என்று அனைவரும் முத்திரை குத்துகிறார்கள். அந்தளவுக்கு ஆரம்ப காலங்களில் அபாரமாக செயல்பட்டு தனக்கென்று தங்கமான தரத்தை உருவாக்கி வைத்துள்ள அவருக்கு ரிக்கி பாண்டிங், பிரையன் லாரா போன்ற வெளிநாட்டு ஜாம்பவான் வீரர்கள் விமர்சனத்தை மிஞ்சும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

- Advertisement -

மேலும் இங்கு முன்னாள் வீரர்கள் என்ற பெயருடைய பலரும் 70 சதங்களை தங்களது கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது என்ற வகையிலும் ஆதரவு பெருகி வருகிறது. இப்படி விமர்சனத்தையும் ஆதரவையும் பெற்றுள்ள விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே தொடரில் ஓய்வு எடுத்துவிட்டு அடுத்ததாக வரும் ஆகஸ்ட் 27 முதல் துவங்கும் ஆசிய கோப்பையில் களமிறங்க தயாராகி வருகிறார்.

பவரும் பயமும்:
இந்த தொடரில் ஃபார்முக்கு திரும்பி சிறப்பாக செயல்பட்டு விமர்சனங்களை அடித்து நொறுக்கி டி20 உலக கோப்பையில் எந்தவித கேள்வியுமின்றி இடம் பிடிப்பாரா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் விராட் கோலி உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை என்று தெரிவிக்கும் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா ஆனால் அவரிடம் இருந்த அந்த பழைய பவரும், நெருப்பும் அவரைப் பார்த்தாலே எதிரணி பவுலர்கள் அஞ்சும் அந்த பயமும் தற்போது இல்லை என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

பொதுவாக ஒவ்வொரு வீரரும் தனது கேரியரில் ஆங்கிலத்தில் பீக் என்றழைக்கப்படும் உச்சகட்டத்தை கடந்த பின்பு சுமாராக செயல்படுவது வழக்கமான ஒன்றாகும். அதிலிருந்து மீண்டெழுந்து ஏபி டிவிலியர்ஸ் போன்ற சிலர் மட்டுமே கடைசி வரை சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். தோனி போன்ற நிறைய பேர் கடைசி காலங்களில் தடுமாற்றமாகவே செயல்பட்டுள்ளார்கள். அந்த வகையில் வரும் காலங்களில் பார்முக்கு திரும்பினாலும் அந்த பழைய கோலியை பார்ப்பது கடினம் தான் என்று தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா இது பற்றி சமீபத்தில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு :

“விராட் கோலியின் கிளாஸ் மற்றும் நுணுக்கம் ஆகியவற்றில் யாருக்கும் எந்த சந்தேகமும் கிடையாது. மேலும் இப்போதிலிருந்து அவர் எந்த ஒரு ரன்களை அடிக்கவில்லை என்றாலும் கிரிக்கெட்டில் விளையாடிய மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக அவர் போற்றப்படுவார்” “அவர் சூப்பர் மனிதரைப் போல நிறைய சாதனைகளை செய்து 3 வகையான கிரிக்கெட்டிலும் மாஸ்டராக செயல்பட்டார்.

இதையும் படிங்க : பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகியோரின் தற்போதைய நிலை என்ன? – வெளியான தேசிய அகாடமி கொடுத்த அப்டேட்

இருப்பினும் கடந்த காலங்களில் மேஜிக் நிகழ்த்திய அவரது பேட் இப்போதெல்லாம் அவருடைய கட்டளைக்கு உட்படுவதில்லை என்பதை யாராலும் மறைக்க முடியாது. அவருடைய பேட்டில் அடிப்பதை விட தவறல்கள் தான் நிறைய உள்ளது. அவரை வீழ்த்த முடியாத ஒளிமயம் தற்போது மங்கிவிட்டது. கடந்த காலங்களில் களத்தில் அவர் இருந்தால் பந்து வீச்சாளர்களின் மனதில் ஏற்பட்ட அதே பயம் இப்போது ஏற்படுவதில்லை” என்று கூறினார்.

- Advertisement -
Published by