IND vs PAK : பாகிஸ்தான் பவுலரை அழைத்து பயிற்சி மேற்கொண்ட விராட் கோலி – யாரோட பவுலிங்ல தெரியுமா?

Kohli
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் துவங்கிய டி20 உலகக் கோப்பை தொடரானது தகுதி சுற்று போட்டிகளைக் கடந்து அடுத்ததாக சூப்பர் 12 சுற்றினை நோக்கி நகர்ந்துள்ளது. அந்த வகையில் நாளை நடைபெற உள்ள இந்த சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத இருக்கும் வேளையில் அதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் அக்டோபர் 23-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற இருக்கிறது.

INDvsPAK

- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற இருக்கும் இந்த போட்டி மழை காரணமாக தடைபடவும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டாலும் நிச்சயம் இந்த போட்டி எப்படியாவது நடைபெற வேண்டும் என பெரிய நம்பிக்கையுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அதே வேளையில் போட்டி நடப்பதற்கான ஆயுத்த பணிகளும் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. ஆனால் அதே வேளையில் தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்க இருந்த பயிற்சி போட்டிகள் மழை காரணமாக ரத்தானதால் இரு அணி வீரர்களும் ஒரே மைதானத்தில் ஒன்றாக பயிற்சியை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

shaheen afridi 1

அந்த வகையில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணி வீரர்கள் ஒரே மைதானத்தில் பயிற்சியை மேற்கொண்டதால் இரு அணி வீரர்களும் தங்களுக்குள் சில ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் மாற்றி மாற்றி பகிர்ந்து கொண்டார்கள். அப்போது பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்-க்கு பந்து வீச சாஹின் அப்ரிடி தயாராகிக் கொண்டிருந்தார்.

- Advertisement -

அவ்வேளையில் விராட் கோலி நேரடியாக ஷாஹீன் அப்ரிடி-யிடம் சென்று உங்களுடைய பயிற்சி முடிந்ததும் எனக்கும் இரண்டு ஓவர்கள் நீங்கள் வீச வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்கு ஒப்புக்கொண்ட ஷாஹீன் அப்ரிடியும் பயிற்சியின் இறுதியில் கோலிக்கு இரண்டு ஓவர்கள் பந்து வீசினார். அதில் 12 பந்துகளில் 10 பந்துகளை அப்ரிடி ஷார்ட் பிட்ச் பந்துகளாகவே வீசினார்.

இதையும் படிங்க : விராட் கோலி, தோனி மீது மீண்டும் வன்மத்தை காட்டிய கெளதம் கம்பீர் – இந்திய ரசிகர்களையும் சாடல், பேசியது என்ன

ஏனெனில் இந்திய வீரர்கள் அவரின் இன்ஸ்விங் பந்துகளில் தடுமாறி வரும் வேளையில் பயிற்சியின்போது அதுபோன்ற பந்துகளை வீசிவிட்டால் கோலி முன்கூட்டியே கணித்து விடுவார் என்பதை கருத்தில் கொண்ட ஷாஹீன் அப்ரிடி அவருக்கு எதிராக ஷார்ட் பிட்ச் பந்துகளை அதிகமாக வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement