சரியாக 10 வருஷத்துக்கு பிறகு மீண்டும் சரிந்த விராட் கோலி.. கரியரில் ஏற்பட்ட பின்னடைவு – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது ஆஸ்திரேலிய நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

மிகப்பெரிய பின்னடைவை சந்தித்த விராட் கோலி :

அதில் இந்திய அணியை சேர்ந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா 904 புள்ளிகள் பெற்று பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் பிடித்து மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ள வேளையில் மற்றொரு நட்சத்திர வீரரான விராட் கோலி 10 வருடத்திற்கு பிறகு மாபெரும் மோசமான சரிவை சந்தித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான இந்த தொடரின் போது முதல் போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்த விராட் கோலி அடுத்ததாக நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டிகளிலும் பெரிய அளவில் ரன்களை குவிக்காமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.

இப்படி தொடர்ச்சியாக அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளார். நடப்பு பார்டர் கவாஸ்கர் தொடரில் தற்போது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள விராட் கோலி :

- Advertisement -

கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் 24-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 24-வது இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தார்.

இதையும் படிங்க : 21 வயதில் அண்டர்ரேட்டட் ஆட்டம்.. பயமற்ற ஜீனியஸ் நிதிஷ்க்கு இந்தியா இந்த வாய்ப்பை கொடுக்கலாம்.. மைக்கேல் கிளார்க்

அதனை தொடர்ந்து தற்போது பத்து ஆண்டுகள் கழித்து இந்த ஆஸ்திரேலியா தொடரில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதால் தற்போது 24-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதே வேளையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களில் ஆறுதலாக இளம் துவக்க ஆட்டக்காரரான ஜெயஸ்வால் 854 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement