ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் நான்கு போட்டிகளின் முடிவில் இரண்டு தோல்விகளை சந்தித்துள்ள இந்தியா தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இந்தியா இழந்துள்ளது.
இந்தத் தொடரில் பேட்டிங் துறையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி, ரோஹித் சர்மா சுமாராக விளையாடி தோல்விக்கு காரணமாக அமைந்தனர். ஆனால் இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் நித்திஸ் ரெட்டி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முடிந்தளவுக்கு இந்தியாவுக்காக போராடி வருகிறார்கள். அதில் இந்தத் தொடரில் அறிமுகமான நிதிஷ் ரெட்டி இதுவரை 4 போட்டிகளில் 294* ரன்கள் எடுத்துள்ளார்.
ஜீனியஸ் நிதிஷ்:
அதனால் இத்தொடரில் இரண்டாவது அதிகபட்ச ரன்கள் குவித்த இந்திய வீரராக அவர் சாதனை படைத்துள்ளார். குறிப்பாக நான்காவது போட்டியில் 8வது இடத்தில் களமிறங்கி 114 ரன்கள் குவித்த நித்திஷ் ரெட்டி இந்தியாவை குறைந்தபட்சம் இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கும் அவமானத்திலிருந்து காப்பாற்றினார். மேலும் மெல்போர்ன் மைதானத்தில் 8வது இடத்தில் களமிறங்கி சதத்தை அடித்த முதல் வீரராகவும் அவர் உலக சாதனை படைத்தார்.
இந்நிலையில் அறிமுகத் தொடரிலேயே ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு பயப்படாமல் விளையாடும் நிதிஷ் ரெட்டி அண்டர்ரேட்டட் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாக முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பாராட்டியுள்ளார். எனவே அவருக்கு இந்திய அணி 6வது இடத்தில் களமிறங்கும் வாய்ப்பைக் கொடுக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்துள்ளார். இது பற்றி மைக்கேல் கிளார்க் பேசியது பின்வருமாறு.
கிளார்க் பாராட்டு:
“8வது இடத்தில் பேட்டிங் செய்யும் இந்த இளம் குழந்தை நித்திஷ் ரெட்டி ஒரு ஜீனியஸ். அவர் நிச்சயமாக 6இல் இல்லையென்றால் கூட ஏழாவது இடத்தில் விளையாட வேண்டும். அவர் இத்தொடரில் இந்தியாவுக்காக 21 வயதில் அதிக ரன்கள் குவித்த வீரராக முன்னணியில் இருப்பது நம்ப முடியாதது. இந்த முழு தொடரிலும் அவருடைய ஆட்டம் அண்டர்ரேட்டட்”
இதையும் படிங்க: ஷேன் வார்னேவை முந்திய பும்ரா வரலாற்று சாதனை.. ஜெய்ஸ்வால் முன்னேற்றம்.. கோலி, ரோஹித்தை அனுப்பும் ரேங்கிங்
“அவர் ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்வதற்கு போதுமானவர் என்று நான் நினைக்கிறேன். எனவே கடைசி போட்டியில் இந்தியா அவருக்கு அந்த வாய்ப்பைக் கொடுப்பது நன்றாக இருக்கும். எந்த ஆஸ்திரேலிய பவுலருக்கும் பயப்படாத அவர் அனைவரையும் கவர்ந்துள்ளார். டெயில் எண்டர்களுடன் அவர் சிறப்பாக பேட்டிங் செய்தார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய 3 துறைகளிலும் அவர் அசத்துகிறார்” என்று கூறினார்.



