ஷேன் வார்னேவை முந்திய பும்ரா வரலாற்று சாதனை.. ஜெய்ஸ்வால் முன்னேற்றம்.. கோலி, ரோஹித்தை அனுப்பும் ரேங்கிங்

Jasprit Bumrah 2
- Advertisement -

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தற்போது நடைபெறும் ஆஸ்திரேலியா தொடரில் ஜஸ்ப்ரித் பும்ரா தொடர்ந்து அசத்தி வருகிறார். குறிப்பாக 4வது போட்டியில் 9 விக்கெட்டுகள் எடுத்த அவர் முடிந்தளவுக்கு இந்தியாவின் வெற்றிக்கு போராடினார். அதன் காரணமாக டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் அவர் கூடுதலாக 3 புள்ளிகளை பெற்று மொத்தம் 907 புள்ளிகளுடன் தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் பவுலராக ஜொலிக்கிறார்.

அதன் வாயிலாக ரவிச்சந்திரன் அஸ்வினை முந்தியுள்ள அவர் 147 வருட ஆல் டைம் டெஸ்ட் கிரிக்கெட்டின் தரவரிசைப் பட்டியலில் அதிக ரேட்டிங் புள்ளிகளை பெற்ற இந்திய வீரர் என்ற மாபெரும் வரலாற்று சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் வரலாற்றிலேயே அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 904 புள்ளிகளை பெற்றிருந்ததே முந்தைய அதிகபட்ச புள்ளிகளாகும்.

- Advertisement -

உச்சத்தில் பும்ரா:

தற்போது ஜஸ்ப்ரித் பும்ரா பெற்றுள்ள 907 புள்ளிகளை வரலாற்றில் வேறு எந்த இந்திய பவுலரும் பெற்றதில்லை. மேலும் ஷேன் வார்னேவை (904) முந்தியுள்ள அவர் ஆல் டைம் ரேட்டிங் பட்டியலில் 17வது இடத்தை டெரெக் அண்டர்வுட் அவர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அவரை தவிர்த்து ரவீந்திர ஜடேஜா மட்டுமே டாப் 10 பவுலர்கள் பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளார்.

டாப் 10 டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 4வது ஆஸ்திரேலிய போட்டியில் 82, 82 என மொத்தம் 164 ரன்கள் குவித்த ஜெய்ஸ்வால் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ரிஷப் பண்ட் 12வது இடத்துக்கு சரிந்துள்ள நிலையில் சுப்மன் கில் 20வது இடத்தில் நீடிக்கிறார். ஆனால் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மிகவும் சுமாராக விளையாடி தோல்விக்கு காரணமாக அமைந்தார்கள்.

- Advertisement -

கிளப்பும் ரேக்கிங்:

அதன் காரணமாக ரோகித் சர்மா 40வது இடத்திற்கு சென்று மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளார். அதே போல விராட் கோலியும் 24வது இடத்திற்கு சரிந்துள்ளார். தற்சமயத்தில் இந்திய ரசிகர்களே அவர்களை ஓய்வு பெறுமாறு விமர்சித்து வருகிறார்கள். அதை உணர்த்தும் வகையில் ஐசிசி தர வரிசையும் அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக கீழே அனுப்புகிறது என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: அது இல்லாத பும்ரா இந்தியாவுக்கு ஜீனி பூதம் மாதிரி.. மார்ஷல், ஆம்ப்ரோஸை மிஞ்சிட்டாரு.. சஞ்சய் மஞ்ரேக்கர்

டாப் 10 டெஸ்ட் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். ஓய்வு பெற்ற அஸ்வின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அணிகள் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கும் நிலையில் ஆஸ்திரேலியா நம்பர் ஒன் அணியாக ஜொலித்து வருகிறது.

Advertisement