அது இல்லாத பும்ரா இந்தியாவுக்கு ஜீனி பூதம் மாதிரி.. மார்ஷல், ஆம்ப்ரோஸை மிஞ்சிட்டாரு.. சஞ்சய் மஞ்ரேக்கர்

Sanjay Manjrekar 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா தற்போது ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அபாரமாக பந்து வீசி வருகிறார். சொல்லப்போனால் அவர் மட்டுமே இத்தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்டு 4 போட்டிகளில் 30* விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதன் வாயிலாக ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராக அவர் உலக சாதனையும் படைத்துள்ளார்.

அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்கள் கர்ட்லி ஆம்ப்ரோஸ், ஜோயல் கார்னர், மால்கோம் மார்சல் ஆகியோரை முந்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருபதுக்கும் குறைவான சராசரியில் 200 விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரராகவும் ஜஸ்ப்ரித் பும்ரா உலக சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் தேவைப்படும் நேரங்களில் விக்கெட்டுகளை எடுத்துக் கொடுக்கும் பலவீனமில்லாத பும்ரா இந்திய கிரிக்கெட்டுக்கு ஜீனி பூதம் போல் கிடைத்துள்ளதாக சஞ்சய் மஞ்ரேக்கர் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

ஜீனியாக ஜீனியஸ் பும்ரா:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த மனிதரிடம் எந்த பலவீனமும் இல்லை. அவர் கிட்டத்தட்ட நீங்கள் கேட்கும் ஆசைகளை நிறைவேற்றும் விஷயங்களை பரிசாக கொடுக்கும் ஜீனியாக இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்துள்ளார். 2024 டி20 உலகக்கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை அல்லது இது போன்ற முக்கியமான போட்டிகளில் மற்ற பவுலர்கள் தடுமாறும் போது பும்ரா விக்கெட்டை எடுத்துக் கொடுக்கிறார்”

“அலெக்ஸ் கேரியை 10, 11வது இடத்தில் களமிறங்கும் பேட்ஸ்மேன் போல அவர் அசால்ட்டாக அவுட்டாக்கினார். தன்னுடைய ஸ்பெல்லின் கடைசி 2 பந்துகளுக்குள் அவர் இருந்ததால் விரைவில் பந்து வீச முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். அப்படிப்பட்ட நிலையில் அந்த இரண்டு பந்துகளுக்குள் அவர் அலெக்ஸ் கேரியின் விக்கெட்டை அபாரமாக எடுத்துக் கொடுத்தார்”

- Advertisement -

பரிசாக பும்ரா:

“அவருடைய பவுலிங் சராசரியை பார்க்கும் போது நம்ப முடியாததாக இருக்கிறது. கர்ட்லி ஆம்ப்ரோஸ் பற்றி நாம் பேசுகிறோம். நான் மால்கோம் மார்சலுக்கு எதிராக விளையாடும் கௌரவத்தை பெற்றிருந்தேன். அது மகத்தான வீரர்களின் பெயர்கள். தற்போது அவர்களையும் மிஞ்சியுள்ள ஜஸ்ப்ரித் பும்ரா 20க்கும் குறைவான சராசரியில் 200 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் என்பது அற்புதமானதாகும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: இவ்ளோ திறமையை வெச்சுருக்கும் ஆச்சர்யமான சுந்தர்.. அஸ்வின் இடத்துக்கு சரியானவர்.. சஞ்சய் மஞ்ரேக்கர்

ஆனால் அப்படி அற்புதமாக பந்து வீசியும் மற்ற வீரர்கள் கை கொடுக்காததால் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா இத்தொடரில் பின்தங்கியுள்ளது. அடுத்ததாக கடைசி போட்டி சிட்னி நகரில் துவங்க உள்ளது. அந்த போட்டியிலாவது வென்று இத்தொடரில் இந்தியா சமன் செய்ய வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகும்.

Advertisement